காஷ்மீரில் நெடுஞ்சாலையைப் பயன்படுத்த பொதுமக்களுக்குத் தடை! தலைவர்கள் கண்டனம்

கடந்த இரு தினங்களாக வாகனத்தின் இரு புறங்களிலும் சரக்கு லாரிகள், தனியார் வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. கி.மீ தூரத்துக்கு நின்ற வாகனங்கள், இன்று சாலையில் அனுமதியளிக்கப்பட்டப் பிறகு சென்றன.

news18
Updated: April 7, 2019, 7:40 PM IST
காஷ்மீரில் நெடுஞ்சாலையைப் பயன்படுத்த பொதுமக்களுக்குத் தடை! தலைவர்கள் கண்டனம்
காஷ்மீர்
news18
Updated: April 7, 2019, 7:40 PM IST
ஜம்மு-ஸ்ரீநகரை இணைக்கும் 370 கி.மீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலையில் பொதுவாகனங்கள் செல்ல வாரத்தில் இரு நாட்கள் தடை செய்யப்படுவதற்கு எதிர்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவிக்கின்றனர்.

காஷ்மீர் மாநிலத்தில் தற்போது ஆளுநர் சத்யபால் சிங் தலைமையில் குடியரசுத் தலைவர் ஆட்சிமுறை அமலில் உள்ளது. புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகன வரிசையின்மீது பிப்ரவரி 14-ம் தேதி அன்று நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலுக்கு பின்னர் மாநிலத்தின் பல பகுதிகளில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிர்வாகம் தொடர்பாக சமீபத்தில் ஆய்வு நடத்திய ஆளுநர் சில முக்கிய முடிவுகளை அறிவித்தார். அதில், ‘தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக வெளி இடங்களில் இருந்து காஷ்மீர் மாநிலத்தின் பல பகுதிகளுக்கு பாதுகாப்பு படையினரை அனுப்பி வைக்க வேண்டியுள்ளது.

இந்நிலையில், முன்னர் புல்வாமாவில் நிகழ்ந்ததுபோல் பாதுகாப்பு படையினர் செல்லும் வாகனங்கள் மீது தாக்குதல் நடைபெறாமல் இருக்க ஜம்மு பகுதியை ஸ்ரீநகருடன் இணைக்கும் 370 கிலோமீட்டர் நீளமுள்ள நெடுஞ்சாலையில் வாரத்தில் இரு நாட்கள் பொது வாகனங்களுக்கு விதிக்கப்பட்டது.

அதனால், கடந்த இரு தினங்களாக வாகனத்தின் இரு புறங்களிலும் சரக்கு லாரிகள், தனியார் வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. கி.மீ தூரத்துக்கு நின்ற வாகனங்கள், இன்று சாலையில் அனுமதியளிக்கப்பட்டப் பிறகு சென்றன.

இதற்கிடையே, ரம்பான் மாவட்டத்தில் உள்ள அனோக்கி நீர்வீழ்ச்சி அருகே ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டதால் இப்பகுதியிலும் போக்குவரத்து முடங்கியது. இந்த நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட சாலை சீரமைக்கப்பட்டு, ஜம்முவை நோக்கி இன்று அதிகாலை சுமார் 2 ஆயிரம் வாகனங்கள் புறப்பட்டு சென்றன.

இந்நிலையில், பாதுகாப்பு என்ற பெயரில் ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சலையில் பொது வாகனங்கள் செல்ல விதிக்கப்பட்ட தடைக்கு அம்மாநில முன்னாள் முதலமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Loading...
இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா, ’இந்த தடையால் வர்த்தகர்கள் பெருமளவிலான பாதிப்பு அடைந்துள்ளனர். சர்வாதிகாரத்துக்கு இணையான இந்த தடையால், சரக்கு லாரிகள் சரியாக சென்றுவர முடியாத நிலையில் உணவுப் பொருள் பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வு ஏற்படும் ஆபத்து உள்ளது.

பாதுகாப்பு படையினரை ரெயில்கள் மூலமாக அனுப்பி வைக்கலாம். அல்லது, இரவு நேரங்களில் மட்டும் பொது வாகனங்களுக்கு தடை விதித்து இந்த நெடுஞ்சாலை வழியாக அனுப்பி வைக்கலாம். எனவே, ஆளுநர் இந்த தடையைத் திரும்பப்பெற வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.

இந்த விவகாரம் குறித்து தெரிவித்த பா.ஜ.க கூட்டணியில் அங்கம் வகித்த முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, ‘இது எங்கள் மாநிலம். எங்கள் மாநிலத்துக்குட்பட்ட சாலைகளை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தும் உரிமை இங்குள்ள மக்களுக்கு உள்ளது.

காஷ்மீர் மக்களின் அடிப்படை சுதந்திரத்தைப் பறிக்கும் இந்தத் தடை உத்தரவால் மாணவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தடைக்கு யாரும் அடிபணிய கூடாது. மக்கள் தங்களது விருப்பம்போல் சென்று வரவேண்டும். அவசியம் ஏற்பட்டால் இந்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்’ என்று தெரிவித்துள்ளார்.


Also see:

First published: April 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...