இறந்த தம்பியின் சான்றிதழ் மூலம் அரசு பணி - 30 ஆண்டுகளுக்குப்பிறகு சிக்கிய ஊழியர்!

இறந்த தம்பியின் சான்றிதழ் மூலம் அரசு பணி - 30 ஆண்டுகளுக்குப்பிறகு சிக்கிய ஊழியர்!

மாதிரி படம்

30 ஆண்டுகள் அரசு பணியில் பணியாற்றியுள்ளார். அவரின் மோசடி தற்போது கண்டுபிடிக்கப்பட்டு காவல்துறையின் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஜம்மு காஷ்மீரில் இறந்த தம்பியின் படிப்பு சான்றிதழ்களைப் பயன்படுத்தி அரசுப் பணியில் 30 ஆண்டுகள் பணியாற்றியவரிடம் அம்மாநில காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

அரசுப் பணிகளில் நடைபெறும் ஒரு சில முறைகேடுகள், பலருக்கும் அரசுப் பணி வாழ்க்கை கனவாக மாறுவதற்கும் காரணமாக அமைகிறது. அதுபோன்ற மோசடி ஒன்று ஜம்மு காஷ்மீரில் 3 தசாப்தங்களுக்குப் பிறகு வெளிசத்துக்கு வந்துள்ளது. 9 ஆம் வகுப்பு கூட படிக்காத ஒரு நபர் தன்னுடன் உடன்பிறந்து இறந்துபோன தம்பியின் சான்றிதழை மோசடியாக பயன்படுத்தி, 30 ஆண்டுகள் அரசு பணியில் பணியாற்றியுள்ளார். அவரின் மோசடி தற்போது கண்டுபிடிக்கப்பட்டு காவல்துறையின் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளார்.

புல்வாமா மாவட்டத்தில் பிறந்த காகா ஜி என அழைக்கப்படும் சக்திபந்து (Shakti Bandhu) என்பவர் தற்போது ஜம்முகாஷ்மீரில் போனி சாக் (Poni Chack ) பகுதியில் வசித்து வருகிறார். இவருடன் பிறந்த தம்பியான அசோக்குமார் 1977 ஆம் ஆண்டு தெற்கு காஷ்மீரில் உள்ள அனந்தாக் கல்லூரியில் பி.ஏ 2 ஆம் ஆண்டு படித்துக்கொண்டிருந்ததார். திடீரென எதிர்பாரதவிதமாக நீரில் மூழ்கி இறந்துள்ளார். அவருடைய மரணத்துக்குப் பிறகு தம்பியின் சான்றிதழ்களை போலியாக பயன்படுத்தி சக்தி பந்து அரசுப் பணிக்கு முயற்சி செய்துள்ளார்.

Also read... ஹேக்கர்களுக்கு எதிராக வேடிக்கையான வீடியோவை வெளியிட்ட மும்பை காவல் துறையினர்...!

அவருடைய முயற்சியின் பலனாக ஜம்மு காஷ்மீரில் நகர்புற மற்றும் ஊரக வளர்ச்சித்துறையில் (IMPA) பணி கிடைத்துள்ளது. இதில் 30 ஆண்டுகள் பணியாற்றிய சக்தி பந்து மோசடியாக பணி பெற்றதை அதிகாரிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பொது நிர்வாகம் உள்ளிட்ட துறை அதிகாரிகள் ஜம்மு காஷ்மீர் மாநில குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் அளித்தனர். இதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், சக்தி பந்து பணி பெற்றது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், 9 ஆம் வகுப்பு கூட தேர்ச்சி பெறாத சக்தி பந்து, இறந்த தம்பி அசோக்குமாரின் (Ashok Kumar) சான்றிதழ்களை பயன்படுத்தி மோசடியாக அரசுப் பணி பெற்றுள்ளார்.

இது தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் (Indian Penal Code) அரசுப் பணியில் மோசடி செய்தல், மற்றொருவரின் சான்றிதழ்களை முறைகேடாக பயன்படுத்துதல், அரசு அதிகாரிகளை ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஸ்ரீநகரில் உள்ள ஜம்மு காஷ்மீர் பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, அச்சானில் உள்ள தொடக்க கல்வித்துறை உள்ளிட்ட துறைகளிடமும் இது குறித்து ஆவணங்கள் பெறப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஜம்மு காஷ்மீர் குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை, சக்திபந்துவுக்கு உரிய தண்டனை நீதிமன்றம் மூலம் பெற்றுத்தரப்படும் என உறுதியளித்துள்ளனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: