Home /News /national /

ஜம்மு-காஷ்மீரில் போலீஸ் பஸ் மீது தீவிரவாதிகள் தாக்குதல்... 2 வீரர்கள் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீரில் போலீஸ் பஸ் மீது தீவிரவாதிகள் தாக்குதல்... 2 வீரர்கள் உயிரிழப்பு

பாதுகாப்பு நிறைந்த இந்த பகுதியில், 2 தீவிரவாதிகள் போலீஸ் பஸ்சை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். எதிர்பாராமல் நடந்த திடீர் தாக்குதலால், பாதுகாப்பு படையினர் நிலைகுலைந்து போனார்கள்.

    ஜம்மு-காஷ்மீரில் போலீஸ் பஸ் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், பாதுகாப்பு படை வீரர்கள் 2  பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அங்கு பதற்றத்தை அதிகரித்துள்ளது. தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

    ஸ்ரீநகரின் ஜெவான் பகுதியில் அமைந்துள்ள போலீஸ் முகாமுக்கு அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. பாதுகாப்பு நிறைந்த இந்த பகுதியில், 2 தீவிரவாதிகள் போலீஸ் பஸ்சை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். எதிர்பாராமல் நடந்த திடீர் தாக்குதலால், பாதுகாப்பு படையினர் நிலைகுலைந்து போனார்கள்.

    இன்று மாலை இந்த பயங்கரவாத சம்பவம் நடந்துள்ளது. காயமடைந்த 14 பேரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்தது.

    Also Read : கடும் எதிர்ப்பு எதிரொலி: சி.பி.எஸ்.இ வினாத்தாளில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கேட்கப்பட்ட கேள்வி நீக்கம்

    இந்நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் ஏ.எஸ்.ஐ, கான்ஸ்டபிள் ஒருவர் என 2 பேர் உயிரிழந்து விட்டதாக ஜம்மு காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது.

    இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    2 நாட்களுக்கு முன்பு காஷ்மீரின் பந்திப்பூர் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 போலீசார் உயிரிழந்தனர். இந்த நிலையில் மற்றொரு தீவிரவாத தாக்குதல் சம்பவம் ஜம்மு-காஷ்மீரில் நடந்திருக்கிறது. இன்று தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Also Read : 55 எச்.டி கேமராக்கள், ட்ரோன் மூலம் மோடியின் காசி நிகழ்ச்சி படம் பிடிப்பு
    Published by:Musthak
    First published:

    Tags: Jammu and Kashmir

    அடுத்த செய்தி