ஜம்மு காஷ்மீர் பிரிப்பு மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது!

ஜம்மு காஷ்மீர் மாநில பிரிப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாக்குச் சீட்டு முறையில் வாக்குப் பதிவு நடைபெற்றது.

news18
Updated: August 5, 2019, 7:10 PM IST
ஜம்மு காஷ்மீர் பிரிப்பு மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது!
ஜம்மு காஷ்மீர்
news18
Updated: August 5, 2019, 7:10 PM IST
ஜம்மு காஷ்மீர் பிரிப்பு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டப் பிரிவு குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் நீக்கப்பட்டது என்று மாநிலங்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். மத்திய அரசின் நடவடிக்கைக்கு, மாநிலங்களவையில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

அதனையடுத்து, காஷ்மீர் பிரிப்பு மசோதா மீதான தீவிர விவாதம் நடைபெற்றது. மசோதா மீதான தீவிர விவாதத்துக்கு பிறகு, முதலாவதாக காஷ்மீரில் முற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதனையடுத்து, ஜம்மு காஷ்மீர் மாநில பிரிப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாக்குச் சீட்டு முறையில் வாக்குப் பதிவு நடைபெற்றது.


மசோதாவுக்கு ஆதரவாக 125 பேரும், எதிராக 61 பேரும் வாக்களித்துள்ளனர். மசோதாவுக்கு ஆதரவாக, பகுஜன் சமாஜ், அ.தி.ம.க, ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. மசோதாவுக்கு காங்கிரஸ், தி.மு.க, தேசியவாத காங்கிரஸ், இரண்டு கம்யூனிஸ்ட், ம.தி.மு.க ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. மாநிலங்களவையில் ஜம்மு காஷ்மீர் பிரிப்பு மசோதா நிறைவேறிய நிலையில், நாளை மக்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also see:

First published: August 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...