• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ஜம்மு காஷ்மீரில் முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் விலகல் - பின்னணியில் குலாம் நபி ஆசாத்?

ஜம்மு காஷ்மீரில் முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் விலகல் - பின்னணியில் குலாம் நபி ஆசாத்?

ராகுல் காந்தி, சோனியா காந்தி

ராகுல் காந்தி, சோனியா காந்தி

ஜம்மு காஷ்மீரின் முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் பலர் கட்சியிலிருந்து விலகியுள்ளனர்.

  • Share this:
    பஞ்சாப், சத்திஸ்கர், ராஜஸ்தானைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் கட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. நான்கு முன்னாள் அமைச்சர்கள், மூன்று முன்னாள் எம்.எல்.ஏக்கள் கட்சியிலிருந்து விலகியுள்ளனர்.  மொத்தம் 20-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தலைவர்கள் கட்சியிலிருந்து விலகியுள்ளனர். ஜம்மு- காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் கட்சி விவகாரம் குறித்து மேலிடத்தில் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என அதிருப்தியில் இருந்துள்ளனர்.

    இந்த நிலையில் அம்மாநில முன்னாள் அமைச்சர்கள் ஜி.எம். சரூரி, ஜுகல் கிஷோர், விகார் ரசூல், மனோகர் லால் ஆகியோர் கட்சியில் இருந்து விலகியுள்ளனர். அதேபோல் குலாம் நபி மோங்கா, நரேஷ் குப்தா, அமின் பாட் ஆகிய முன்னாள் எம்.எல்.ஏ-க்களும் விலகியுள்ளனர்.

    இந்தத் தலைவர்கள் தங்களது குறைந்தபட்ச கோரிக்கை குறித்து மேலிடத் தலைவர்களிடம் தெரிவிப்பதற்கான நேரம் கேட்டதாகவும், கடந்த ஒரு வருடமாக நேரம் ஒதுக்கப்படவில்லை எனவும், காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆகஸ்ட் மாதம் ஸ்ரீநகர் மற்றும் ஜம்முக்கு வந்தபோது சந்திக்க நேரம் கேட்டு வழங்கப்படவில்லை எனவும் தெரிகிறது. இதனால் அதிருப்பதி அடைந்த நிலையில் தற்போது கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.

    இவர்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அளவில் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத்திற்கு நெருக்கமானவர்கள் என கருதப்பட்டவர்கள். இவர்கள் அனைவரும் சோனியா காந்திக்கு ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, குலாம் நபி ஆசாத் பா.ஜ.கவுக்கு நெருக்கமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துவந்தன. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத்தை காங்கிரஸ் கட்சி மீண்டும் மாநிலங்களவை எம்.பியாக்க நியமிக்கவில்லை. அதனையடுத்து, குலாம் நபி ஆசாத்துக்கான பிரிவு உபசார விழாவின்போது அவருக்காக பிரதமர் மோடி கண்ணீருடன் பேசினார். இந்தச் சம்பவம் காங்கிரஸில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஜம்மு காஷ்மீரில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து முக்கியத் தலைவர்கள் விலகியுள்ளனர். இது காங்கிரஸ் கட்சிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: