முகப்பு /செய்தி /இந்தியா / திருமண செய்து தராததால் ஆத்திரம்.. இளம்பெண்ணை துண்டு துண்டாக வெட்டி வீசிய நபர்... ஜம்மு காஷ்மீரில் கொடூரம்..!

திருமண செய்து தராததால் ஆத்திரம்.. இளம்பெண்ணை துண்டு துண்டாக வெட்டி வீசிய நபர்... ஜம்மு காஷ்மீரில் கொடூரம்..!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ஜம்மு காஷ்மீர் 30 வயது பெண்ணை கொலை செய்து பல துண்டுகளாக வெட்டி வீசிய நபரை காவல்துறை கைது செய்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Jammu and Kashmir, India

ஆண்-பெண் உறவு சார்ந்த கொடூர கொலை சம்பவங்கள் சமீப காலமாகவே அதிகம் காணப்படுகின்றன. ஷர்த்தா வாக்கர், நிக்கி யாதவ் போன்ற இளம் பெண்கள் தங்கள் காதலன்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டது நாட்டையே உலுக்கி போட்டது. அத்தகைய மோசமான கொலை சம்பவம் தற்போது ஜம்மு காஷ்மீரிலும் நடந்துள்ளது.

இதையும் படிங்க; “பெற்றோரிடம் சொல்லிவிடுவோம்” - பூங்காவில் நுழைந்து காதலர்களை மிரட்டி வெளியேற்றிய போலீசார்..!

ஜம்மு காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தில் உள்ள சோய்பக் பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண் கடந்த மார்ச் 7ஆம் தேதியில் இருந்து மாயமாகியுள்ளார். இதைத் தொடர்ந்து காவல்துறையில் அந்த பெண்ணின் சகோதரர் தன்வீக் அகமது கான் புகார் அளித்துள்ளார். தனது 30 வயது சகோதரி கோச்சிங் வகுப்புக்கு சென்று வீடு திரும்பவில்லை என அவர் புகார் கூறிய நிலையில், காவல்துறையினர் தேடத் தொடங்கியுள்ளனர்.

அந்த பெண்ணுக்கு அறிமுகமானவரான ஷபீர் அகமது வானி என்ற 45 வயது நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்துள்ளனர். பெண் கடைசியாக பேசி தொலைபேசி அழைப்புகளை அடிப்படையாக கொண்டு ஷபீரை பிடித்துள்ளனர். அப்போது அவரிடம் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் பெண்ணை கொலை செய்து பல துண்டுகளாக வெட்டி வீசியதாக பகீர் உண்மையை ஒப்புக்கொண்டார்.

தச்சு வேலை செய்யும் ஷபீருக்கு மயாமான பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஆசை இருந்துள்ளது. பெண்ணின் உறவினர்களையும் பெண் கேட்டு அனுகியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவிக்கவே அது அவருக்கு ஆத்திரமாக மனதில் தங்கியுள்ளது. பின்னர் வீட்டில் சில தச்சு வேலை செய்வதாக வந்து அந்த பெண்ணை சமீபத்தில் பார்த்துள்ளார்.

இந்நிலையில், சம்பவ நாள் அன்று பெண்ணை கொலை செய்த ஷபீர், அவரது உடலை பல துண்டுகளாக வெட்டி ஓம்பூரா பகுதியில் உள்ள பல இடங்களில் வீசியுள்ளார். ஷபீரை கைது செய்து வாக்குமூலத்தை பெற்ற காவல்துறை இறந்த பெண்ணின் உடல் பாகங்களை மீட்டு வருகின்றனர்.

First published:

Tags: Crime News, Jammu and Kashmir, Murder