ஆகஸ்ட் 16 முதல் ஜம்மு-காஷ்மீரில் மாவட்டத்துக்கு ஒரு இடத்தில் மட்டும் 4ஜி சேவை - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு இடத்தில் 4ஜி சேவை வரும் 16ம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கோப்புப் படம்
- News18 Tamil
- Last Updated: August 11, 2020, 10:50 PM IST
கடந்தாண்டு ஜம்மு -காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஆகஸ்ட் 5ம் தேதி பிரிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்துவதாகக் கூறி அதிவேக 4ஜி இணைய சேவையை மத்திய அரசு ரத்து செய்தது. இதனால் மாணவர்களின் கல்வி, மருத்துவ வசதிகள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ரமணா முன்பு விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், வரும் 16ம் தேதி முதல் முக்கிய தேவைகளுக்கு மட்டுமே ஒரு மாவட்டத்துக்கு ஒரு இடத்தில் 4ஜி சேவை கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அட்டர்ணி ஜெனரல் வேணுகோபால் உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளார். பாதுகாப்பு கருதி எல்லைப்பகுதியில் இந்தச் சேவை இருக்காது என்றும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது.