”அமர்நாத் யாத்ரீகர்கள் உடனடியாக காஷ்மீரை விட்டு வெளியேறுங்கள்”

Web Desk | news18-tamil
Updated: August 2, 2019, 11:19 PM IST
”அமர்நாத் யாத்ரீகர்கள் உடனடியாக காஷ்மீரை விட்டு வெளியேறுங்கள்”
Web Desk | news18-tamil
Updated: August 2, 2019, 11:19 PM IST
பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக, அமர்நாத் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உடனடியாக திரும்பிச் செல்லுமாறு ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

அமர்நாத் யாத்திரை கடந்த ஜுன் மாதம் 30-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 15 வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பஹல்காம், பால்தால் பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக, அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. யாத்ரீகர்கள் செல்லும் பாதையில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால், ஆகஸ்ட் 4 வரை யாத்திரை ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே ஸ்ரீநகரில் செய்தியாளர்களை சந்தித்த ராணுவ அதிகாரி கேஜேஎஸ். தில்லோன், அமர்நாத் யாத்திரைக்கு பயங்கரவாதிகள் குறிவைத்துள்ளதாக தெரிவித்தார்.  மேலும், பாகிஸ்தான் ராணுவத் தயாரிப்பில் உருவான கண்ணிவெடி பறிமுதல் செய்யப்பட்டதாக கூறிய அவர் , தொலைநோக்கி பொருத்திய ரைஃபல் ரக துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார்.


ஐஇடி வகை வெடிகுண்டுடன் அதனை தயாரித்த பயங்கரவாதியும் சிக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக காஷ்மீர் உள்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், அமர்நாத் யாத்திரை பாதையில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை கூறியதை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால், யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு உடனடியாக திரும்ப வேண்டும் என ஜம்மு- காஷ்மீர் மாநில அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது

 

Loading...

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு கூடுதலாக 25,000 பாதுகாப்பு படையினரை அனுப்பியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

ஜம்மு-காஷ்மீரின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு ராணுவ வீரர்கள் அதிகம் பேரை அனுப்பியுள்ளதாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. காஷ்மீரில் மொத்தம் 38 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

First published: August 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...