ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கி, சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளனர்.
ஜம்மு - காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடத்துவது மற்றும் மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து பிரதமர் மோடி, அரசியல் கட்சிகளுக்கு ஆலோசிக்க அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட ஜம்மு - காஷ்மீர் அரசியல் கட்சித்தலைவர்கள், தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
சுமார் மூன்றரை மணிநேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில், காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் வழங்க வலியுறுத்தப்பட்டது. மேலும் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்துவது குறித்தும், காஷ்மீர் பண்டிட் இனத்தவர்ளை மீண்டும் குடியமர்த்தவும் வலியுறுத்தப்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
வீட்டுச் சிறைகளில் வைக்கப்பட்டுள்ள மற்றும் கைதாகியுள்ள அரசியல் கட்சி தலைவர்களை விடுவிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த தலைவர்கள், காஷ்மீரின் பாதுகாப்பு மற்றும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, முழு மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்திருப்பதாக தெரிவித்தனர்.
Also read: RIL AGM 2021: ரிலையன்ஸில் ஊழியர்கள் பணி நீக்கம் இல்லை; முழு போனஸ், மருத்துவ செலவு ஏற்பு - நீடா அம்பானி தகவல்!
வார்டு மறுவரையறை நிறைவடைந்ததும் சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் தொடங்கும் என்று பிரதமர் தெரிவித்திருப்பதாகவும், பிரதமருடனான கூட்டம் நம்பிக்கை அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் தலைவர்கள் தெரிவித்தனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.