முகப்பு /செய்தி /இந்தியா / காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடுநிலைப் பள்ளிகள் இன்று திறப்பு!

காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடுநிலைப் பள்ளிகள் இன்று திறப்பு!

இயல்பு வாழ்க்கை திரும்பும் காஷ்மீரில் 190 அரசு ஆரம்பப் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. ஆனால், வன்முறைக்கு பயந்து குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப சில பெற்றோர்கள் மறுத்தனர்.

  • Last Updated :

காஷ்மீரில் அரசு தொடக்கப்பள்ளிகள் நேற்று திறக்கப்பட்ட நிலையில், இன்று காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் உள்ள அனைத்து நடுநிலைப் பள்ளிகளும் மீண்டும் திறக்கப்பட உள்ளது.

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பு விவகாரங்களால் காஷ்மீரில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இதனால் கடந்த இரண்டு வாரமாக ஊரடங்கு தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. முன்னாள் முதலமைச்சர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா மும்ப்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

காஷ்மீரில் பதற்றம் தணிந்ததை அடுத்து பல்வேறு பகுதிகளில் தடை உத்தரவு படிப்படியாக திரும்பப் பெறப்பட்டு தொலைபேசி, இணைய சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. காஷ்மீர் பள்ளத்தாக்கில் பெரும்பாலான தொலைபேசி இணைப்புகள் செயல்பட தொடங்கியுள்ளன.

இந்நிலையில் இயல்பு வாழ்க்கை திரும்பும் காஷ்மீரில் 190 அரசு ஆரம்பப் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. ஆனால், வன்முறைக்கு பயந்து குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப சில பெற்றோர்கள் மறுத்தனர்.

குழந்தைகள் இல்லாத பள்ளிகள்

இதனால் பள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை குறைவாக இருந்தது. இந்நிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்குகளில் உள்ள அனைத்து நடுநிலைப் பள்ளிகளும் இன்று முதல் மீண்டும் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

மேலும் படிக்க... 

காஷ்மீரை போலவே தமிழகத்தை வட, தென் தமிழகமாக பிரிக்க வாய்ப்பு

top videos

    First published:

    Tags: Kashmir