முகப்பு /செய்தி /இந்தியா / ஜம்மு - காஷ்மீரில் புதிதாக 25 லட்சம் வாக்காளர்கள்.. தேர்தல் ஆணையத்தின் முடிவால் சர்ச்சை

ஜம்மு - காஷ்மீரில் புதிதாக 25 லட்சம் வாக்காளர்கள்.. தேர்தல் ஆணையத்தின் முடிவால் சர்ச்சை

காஷ்மீர் வாக்காளர்கள்

காஷ்மீர் வாக்காளர்கள்

2019 க்கு பிறகு வாக்காளர் பட்டியல் திருத்தப்படாததால் 19 முதல் 23 வயதுடைய ஜம்மு இளைஞர்களது பெயர்கள் சேர்க்கப்படுவர்  தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • jammu |

ஜம்மு - காஷ்மீரில் வசிக்கும் யார் வேண்டுமானாலும் வாக்காளர் ஆகலாம் என்றும் 25 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்படலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவு நீக்கப்பட்டு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. காஷ்மீரும், லடாக்கும் தனித்தனி யூனியன் பிரதேசமாக்கப்பட்டன. அந்த அதிர்ச்சியில் இருந்தே காஷ்மீர் அரசியல் கட்சிகள் மீளாத நிலையில் வாக்காளர் பட்டியல் தொடர்பாக புதிய சர்ச்சை உருவாகியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் தொகுதி மறுவரையறை பணிகள் நடைபெற்ற நிலையில், அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி ஹிர்தேஷ்குமார், இருபது முதல் 25 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்படலாம் என்றும் இதுவரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாத புதிய பிரிவினர் இணைக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.

கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட 5-ம் தேதி வரை காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து இருந்தவரையில் நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். பாகிஸ்தானில் இருந்தோ இடம்பெயர்ந்து வந்தவர்களோ, வேறு மாநிலத்தவர்களோ வாக்களிக்க முடியாது என்று  இருந்தது.

ரூ.37.5 லட்சம் வரி பாக்கி கட்ட சொல்லி கூலி தொழிலாளிக்கு நோட்டீஸ் அனுப்பிய அதிகாரிகள்..

ஆனால் இனி ஜம்மு-காஷ்மீரில் வாக்களிக்க நிரந்தர குடியுரிமை சான்று தேவையில்லை. காஷ்மீரில் பணிபுரியும் ராணுவ வீரர்கள், அங்கு பணிபுரியும் அரசு ஊழியர்கள் புலம் பெயர் தொழிலாளர்கள் ஆகியோர் இனி வாக்களிக்கலாம்.

அங்கு தற்போது மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 75 லட்சமாக உள்ளது. புதிதாக மேலும் 25 லட்சம் வாக்காளர்கள் வரை அதாவது 30 சதவீதம் பேர் கூடுதலாக பட்டியலில் இணைக்கப்படவுள்ளனர். 2019 க்கு பிறகு வாக்காளர் பட்டியல் திருத்தப்படாததால் ஜம்முவில் வாழும் 19 முதல் 23 வயதுடைய  இளைஞர்களது பெயர்கள் சேர்க்கப்படுவர் என  தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 15 ஆம் தேதி ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்காளர் பட்டியல் வரைவு வெளியிடப்படும் என்று தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.  "சட்டசபை தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து நாங்கள் 600 புதிய வாக்குச்சாவடிகளை சேர்த்துள்ளோம், மேலும் மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை தற்போது 11,370 ஆக உயர்ந்துள்ளது," என்று அவர் கூறினார்.

இந்தியாவில் 82 குழந்தைகளுக்கு பரவியுள்ள தக்காளி காய்ச்சல்.. இதன் பாதிப்பு என்ன?

அக்டோபர் 25 உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளுக்கான கடைசி தேதியாகும். மேலும், நவம்பர் 25ஆம் தேதிக்குள் 90 சட்டமன்றத் தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.

தேர்தல் ஆணையத்தின் செயல் குறித்து தேசிய மாநாடு, மக்கள் ஜனநாயக கட்சி, மார்க்சிஸ்ட், மக்கள் மாநாடு உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால், வாக்காளர் பட்டியலில் உள்ளூர் மக்கள் சிறுபான்மையினர் ஆகிவிடுவர் என அக்கட்சிகள் கவலை தெரிவித்துள்ளன. இந்நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள ஜம்மு-காஷ்மீர் அரசு, காஷ்மீரில் 18 வயதை அடைந்தோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் அங்கு வசிப்பவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் எனக் கூறி கனன்று கொண்டிருக்கும் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சித்திருக்கிறது

First published:

Tags: Jammu and Kashmir, Voter List, Voters list