குறையும் மாநிலங்கள்... அதிகரிக்கும் யூனியன் பிரதேசங்கள்...!

கடைசியாக 2014-ம் ஆண்டு ஆந்திராவில் இருந்து புதியதாக தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டது. இதனால், இந்தியாவில் மாநிலங்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்தது.

news18
Updated: August 5, 2019, 5:19 PM IST
குறையும் மாநிலங்கள்... அதிகரிக்கும் யூனியன் பிரதேசங்கள்...!
இந்திய வரைபடம்
news18
Updated: August 5, 2019, 5:19 PM IST
ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்து குறைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் மாநிலங்களின் எண்ணிக்கை 28 ஆக குறைந்துள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கப்படுவதாக மத்திய அரசு இன்று அறிவித்தது. மேலும், ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

லடாக் பகுதி காஷ்மீரில் இருந்து பிரிக்கப்பட்டு சட்டப்பேரவை அல்லாத யூனியன் பிரதேசமாகவும், ஜம்மு காஷ்மீர் பகுதி சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading...கடைசியாக 2014-ம் ஆண்டு ஆந்திராவில் இருந்து புதியதாக தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டது. இதனால், இந்தியாவில் மாநிலங்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்தது.

தற்போது, ஜம்மு காஷ்மீர் மாநில அந்தஸ்தை இழப்பதால் இந்தியாவில் மாநிலங்களின் எண்ணிக்கை 28-ஆக குறையும். அதே வேளையில், 7 ஆக உள்ள யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரிக்கிறது.

டெல்லி, புதுச்சேரி, டையூ-டாமன், தாத்ரா நாகர்வேலி, சண்டிகர், லட்சத்தீவுகள், அந்தமான் ஆகியவை அடங்கியுள்ள யூனியன் பிரதேசங்களின் பட்டியலில் புதிதாக ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள் இணைய உள்ளன.

டெல்லி மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக உள்ளதுபோல, ஜம்மு காஷ்மீரும் இனி மாற்றப்படும். லடாக் மற்ற யூனியன் பிரதேசங்களைப் போல மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும்.

டெல்லி, புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருந்தாலும், முக்கிய அதிகாரங்களாக போலீஸ், நிலவுரிமை ஆகியவை மத்திய அரசின் வசமே இருக்கும்.
First published: August 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...