ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் துப்பாக்கிச்சூடு... ஒருவர் காயம்

கவஹலன், சோகஸ், கிகர், கதி ஆகிய பகுதிகளில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார்

ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் துப்பாக்கிச்சூடு... ஒருவர் காயம்
ஜம்மு - காஷ்மீர்
  • News18
  • Last Updated: March 1, 2019, 9:35 AM IST
  • Share this:
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே இன்று அதிகாலை துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.

காஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானின் பாலக்கோடு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இந்தியாவின் எல்லைப்பகுதியில் தாக்குதல் நடத்தி இந்தியாவுக்கு பதிலடி கொடுத்தது பாகிஸ்தான். இதனால் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது வருகிறது.

தற்போது குப்வாரா மாவட்டம் ஹந்த்வாரா பகுதியில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே இன்று அதிகாலை துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. துப்பாக்கிச்சூட்டில் யாரும் பலியாகவில்லை. மேலும் 3 பயங்கரவதிகள் படிபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாலை நடந்த துப்பாக்கிச்சூட்டிற்கு பிறகு தற்போது தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.




முன்னதாக புதன்கிழமை ஜம்மூ-காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள மீமந்தர் பகுதியில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் புல்வாமா தாக்குதலில் சம்பந்தப்பட்ட ஜெய்ஷ்-இ- முகமது அமைப்பை சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.



இதேபோல் கவஹலன், சோகஸ், கிகர், கதி ஆகிய பகுதிகளில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,

First published: March 1, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading