காஷ்மீரில் பயங்கரவாதிகள் மூவர் சுட்டுக்கொலை

காஷ்மீரில் பயங்கரவாதிகள் மூவர் சுட்டுக்கொலை

மசூத் அகமது

 • Share this:
  காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச்சூட்டில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் தளபதி உள்பட மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

  அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள குல்சோகர் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அந்த இடத்தை பாதுகாப்புப் படை வீரர்கள் சுற்றி வளைத்தனர்.

  அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் மூன்று பேர், பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் தளபதி மசூத் அகமது பட் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் இருவர் உயிரிழந்தனர்.

  Also read... விமான நிலையத்தில் அனைத்து பயணிகளுக்கும் சோதனை? சர்ச்சையை ஏற்படுத்திய தொற்று எண்ணிக்கை

  மசூத் இறந்தவுடன் ஜம்மு பிராந்தியத்தில் உள்ள தோடா மாவட்டம் முழுவதும் பயங்கரவாதிகளிடமிருந்து முற்றிலும் விடுபட்டுள்ளது.
  Published by:Vinothini Aandisamy
  First published: