ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஜம்மு காஷ்மீர் டிஜிபி வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை.. தலைமறைவான வீட்டு உதவியாளரை தேடும் போலீஸ்

ஜம்மு காஷ்மீர் டிஜிபி வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை.. தலைமறைவான வீட்டு உதவியாளரை தேடும் போலீஸ்

ஜம்மு காஷ்மீர் சிறைத்துறை டிஜிபி வீட்டில் படுகொலை

ஜம்மு காஷ்மீர் சிறைத்துறை டிஜிபி வீட்டில் படுகொலை

People’s Anti Fascist Force என்ற பயங்கரவாத அமைப்பு இந்த கொலைக்கு பொறுப்பேற்றுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Jammu and Kashmir, India

  ஜம்மு காஷ்மீரின் சிறைத்துறை டிஜிபி ஹேமந்த் லோஹியா அவரது இல்லத்தில் மர்மான கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் ஜம்மு நகரில் உள்ள உதய்வாலா என்ற பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில், இவர் நேற்றிரவு வீட்டில் மர்மமான முறையில் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இவரது உடலை ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். 57 வயதான ஹேமந்த் குமார் 1992ஆம் ஆண்டில் ஐபிஎஸ் ஆக பொறுப்பேற்றார்.

  ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இவர் ஜம்மு காஷ்மீரின் சிறைத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டார். இதுவே ஜம்மு காஷ்மீரின் மிக உயரியப் பொறுப்பாகும். காவல்துறையில் உயர் பொறுப்பில் இருக்கும் நபர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்த ஹேமந்த் குமார் வீட்டில் பணியாற்றிய ஜசிர் என்ற நபர் தலைமறைவாகியுள்ளார். எனவே, இந்த கொலையில் அவருக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்ற நோக்கில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

  மேலும், People’s Anti Fascist Force என்ற பயங்கரவாத அமைப்பு இந்த கொலைக்கு பொறுப்பேற்றுள்ளது. அதேவேளை, காவல்துறை தரப்பு இந்த கொலையில் ஈடுபட்டவர்களின் அடையாளம் குறித்த தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.

  சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஜம்மு காஷ்மீர் டிஜிபி தில்பாஜ் சிங், "இது மிகவும் வருந்தத்தக்க நிகழ்வு,  ஹேமந்த்தின் உடலை  கொலையாளி தீவைக்க திட்டமிட்டுள்ளார். ஆனால் அதை செய்வதற்குள் காவல்துறை வீட்டிற்கு வந்து சேர்ந்துள்ளது. வீட்டில் பணிபுரிந்த ஜசிர் தலைமறைவாகியுள்ளார். அவரை தேடும் பணியில் நாங்கள் தீவிரமாக செயல்பட்டு வருகிறோம்" என்றார்.

  இதையும் படிங்க: 5 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த 12 வயது சிறுவன்..உ.பி.யில் அதிர்ச்சி சம்பவம்

  ஜம்மு காஷ்மீரில் சட்டப் பிரிவு 370 நீக்கம் செய்த பின்னர், அங்கு அரசு பணியாளர்கள், அரசியல் தலைவர்கள், மாற்று மாநிலத்தவர்கள் குறிவைத்து கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சூழலில் காவல்துறையின் மிக முக்கிய பொறுப்பில் உள்ளவரே கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Jammu and Kashmir, Murder, Police, Terror Attack