ஹோம் /நியூஸ் /இந்தியா /

10,000 அடி உயரத்தில் ஜம்மு-காஷ்மீர் எல்லையில் தீபாவளியை கொண்டாடும் ராணுவ வீரர்கள்!

10,000 அடி உயரத்தில் ஜம்மு-காஷ்மீர் எல்லையில் தீபாவளியை கொண்டாடும் ராணுவ வீரர்கள்!

ராணுவ தீபாவளி

ராணுவ தீபாவளி

எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். இந்திய ராணுவம் பூஞ்ச் ​​எல்லையில் உள்ள கடைசி போஸ்டில் தீபாவளி கொண்டாட்டத்தோடு நாட்டை பாதுகாத்து வருகிறோம்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Jammu and Kashmir, India

  வீட்டை விட்டு நாட்டுக்காக எல்லை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ராணுவ வீரர்கள் தங்கள் களங்களிலேயே தீபம் ஏற்றி தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்.

  இந்தியா- பாகிஸ்தான் எல்லையான லைன் ஆப் ஆக்சுவல் கன்ட்ரோல் பகுதியில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் 10,000 அடி உயரத்தில் உள்ள இந்தியாவின் கடைசி ராணுவச் சாவடியில் தீபாவளியைக் கொண்டாடி வருகிறார்கள்.

  தீபாவளியை முன்னிட்டு அனைத்து இந்தியர்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். இந்திய ராணுவம் பூஞ்ச் ​​எல்லையில் உள்ள கடைசி போஸ்டில் தீபாவளி கொண்டாட்டத்தோடு நாட்டை பாதுகாத்து வருகிறோம் என்று இந்திய ராணுவ வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

  தீபாவளி கொண்டாட இன்று அயோத்தி செல்லும் பிரதமர் மோடி..15 லட்சம் அகல் விளக்கு ஏற்றும் சாதனை நிகழ்வை தொடங்கி வைக்கிறார்!

  இந்திய ராணுவ வீரர்கள் மத்தாப்பு கொள்ளுத்தியும், அகல் விளக்கு ஏற்றியும் உற்சாகமாக தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.

  அதேபோல் ஜம்மு-காஷ்மீர் அங்குர் செக்டார் பகுதியில், ராணுவ வீரர்கள் அகல் விளக்கேற்றியும், பட்டாசு வெடித்தும் தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.

  நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் தீபாவளியை கொண்டாட வேண்டும் என்றும், 24 மணி நேரமும் நாட்டை தாங்கள் பாதுகாத்து வருவதாகவும் ராணுவ வீரர்கள் தெரிவித்தனர்.

  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: Army, Border Security Force, Diwali festival, Jammu and Kashmir