ஜம்மு காஷ்மீரின் கத்தாரா பகுதியில் யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஜம்முவின் புகழ்பெற்ற வைஷ்னோ தேவி கோயிலுக்கு இந்த பேருந்து பக்தர்களை ஏற்றிச் சென்றுள்ளது.
இந்த பேருந்து கத்தாரா அருகேயுள்ள கர்மால்லில் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இந்த விபத்தில் இருவர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில், 20 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து ஜம்மு காஷ்மீர் ஏடிஜிபி முகேஷ் சிங் சம்பவயிடத்திற்கு விரைந்தார். அங்கு காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் இன்ஜினில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
Four pilgrims charred to death and 24 persons received burn injuries when a #Jammu bound bus from #Katra caught fire near #Nommai, 3 Kms from Katra today. 14 injureds shifted to GMC Jammu.
அதேவேளை, வெடிபொருள்கள் ஏதேனும் இந்த சம்பவத்திற்கு காரணமா என்ற கோணத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்திற்கு ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தனது வருத்தத்தை பதிவிட்டுள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், கத்தாராவில் நடைபெற்ற பேருந்து விபத்து பெரும் வேதனையை தருகிறது. விபத்தின் உயிரிழந்த குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் விரைந்து குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து நிவாரணம் கிடைக்க அவர்களுக்கு தேவையான உதவி செய்ய அரசு நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன் என ட்வீட் செய்துள்ளார்.
மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 இழப்பீடும் வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.
Published by:Kannan V
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.