காவல்துறையினர் பிறப்புறுப்பில் தாக்கினார்கள்! ஜாமியா தள்ளுமுள்ளுவில் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார்

காவல்துறையினர் பிறப்புறுப்பில் தாக்கினார்கள்! ஜாமியா தள்ளுமுள்ளுவில் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார்
ஜாமியா மாணவர்கள் போராட்டம்
  • News18 Tamil
  • Last Updated: February 10, 2020, 10:43 PM IST
  • Share this:
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்ற ஜாமியா பல்கலைக் கழக மாணவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் காயமடைந்த 16 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல உள்ளதாக ஜாமியா ஒருங்கிணைப்புக் குழுவினர் அறிவித்தனர். இதன்படி, பேரணி புறப்பட்டது.

ஆனால், பல்கலைக் கழகம் அருகே உள்ள ஹோலி பேமிலி மருத்துவமனை முன்பு, போராட்டக்காரர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். பல்கலைக் கழக வளாகத்திலேயே போராட்டம் நடத்துமாறும், நாடாளுமன்றம் நோக்கி செல்ல வேண்டாம் என்றும் போலீஸார் கேட்டுக் கொண்டனர். ஆனால், போலீஸாரின் அறிவுரையை ஏற்க மறுத்த போராட்டக்காரர்கள் தொடர்ந்து முன்னேறி செல்ல முயன்றனர். ஆனால், தடுப்புகளை வைத்த போலீஸார் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர்.


இதனால், இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதனால், மாணவர்கள் பலர் காயமடைந்தனர். பலர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறலுக்கு ஆளாகினர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்டவர்கள், ‘பெண்களின் பிறப்புறுப்பில் காவல்துறையினர் லத்தியால் தாக்கினர்’ என்று புகார் கூறியுள்ளனர். போராட்டக்காரர்கள், காவல்துறைக்கு இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பாதிக்கப்பட்ட 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Also see:
First published: February 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்