ஹோம் /நியூஸ் /இந்தியா /

கிராமப்புறங்களில் 11 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வசதி.. புதிய இலக்கை தொட்ட ஜல் ஜீவன் திட்டம்

கிராமப்புறங்களில் 11 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வசதி.. புதிய இலக்கை தொட்ட ஜல் ஜீவன் திட்டம்

ஜல் ஜீவன் திட்டம்

ஜல் ஜீவன் திட்டம்

2 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 100 சதவீத குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக ஜல் சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

2019இல் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஆட்சி அமைத்த பின்னர் நாடு முழுவதும் உள்ள வீடுகள் அனைத்திற்கும் குடிநீர் வசதி சேர்க்க ஜல் ஜீவன் என்ற திட்டத்தை அறிவித்து தொடங்கி வைத்தார். குறிப்பாக, கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் குழாய்கள் மூலம் குடிநீர் வசதியை கொண்டு சேர்ப்பதே இந்த திட்டத்தின் நோக்கம். இதற்காகவே மத்திய ஜல் சக்தி அமைச்சகம் என்ற தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது.

இந்த திட்டம் தற்போது புதிய இலக்கை எட்டியுள்ளதாக மத்திய ஜல்சக்தி அமைச்சகம் அறிவித்துள்ளது. அமைச்சகத்தின் தகவலின் படி ,ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களைச் சேர்ந்த வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்பு எண்ணிக்கை 11 கோடி என்ற இலக்கை எட்டியுள்ளது. 123 மாவட்டங்களில், 1.53 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடுதோறும் குடிநீர் என்னும் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த கிராமங்களில் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.

2019ம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி, ஜல் ஜீவன் திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. 2024ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு கிராமப்புற வீட்டுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படுவதை நோக்கமாக கொண்டு இது தொடங்கப்பட்டது. 2019ம் ஆண்டு இந்தத் திட்டம் துவக்கப்பட்டப்போது, 19.35 கோடி கிராமப்புற வீடுகளில், 3.23 கோடி (16.72%) வீடுகள் மட்டுமே குழாய் இணைப்பு பெற்றுள்ளன.

3 ஆண்டுகள் என்ற, குறுகிய காலத்தில் இந்த திட்டத்தின் மூலம் 11 கோடிக்கும் மேற்பட்ட கிராமப்புற வீடுகள் (56.8%) தற்போது குழாய் மூலம் குடிநீர் பெற்றுள்ளன. கோவா, கேரளா ஆகிய இரண்டு மாநிலங்கள், அந்தமான் நிக்கோபார் தீவுகள், தாத்ரா, நாகர் ஹவேலி மற்றும் டையு-டாமன், ஜம்மு-காஷ்மீர், புதுச்சேரி ஆகிய நான்கு யூனியன் பிரதேசங்களில் 100 சதவீத குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 16 மாநிலங்களின் 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த சாதனையை வெற்றிகரமாக நிகழ்த்திய களப்பணியாளர்களை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

First published:

Tags: Drinking water, PM Modi