“மோடி ஏற்கனவே ஏழைகளுக்கு அதிகமாக செய்துள்ளார்” ராகுலின் திட்டம் பற்றி அருண் ஜெட்லி கருத்து!

ராகுல் காந்தி அறிவித்ததை விட 1.5 மடங்கு அதிகமாக பிரதமர் மோடியின் அரசு ஏழைகளுக்கு செய்துள்ளது என அருண் ஜெட்லி விமர்சனம் செய்துள்ளார்.

news18
Updated: March 25, 2019, 10:03 PM IST
“மோடி ஏற்கனவே ஏழைகளுக்கு அதிகமாக செய்துள்ளார்” ராகுலின் திட்டம் பற்றி அருண் ஜெட்லி கருத்து!
அருண் ஜெட்லி
news18
Updated: March 25, 2019, 10:03 PM IST
ஏழைக்குடும்பங்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் என்ற ராகுல் காந்தியின் அறிவிப்பு பற்றி கருத்து தெரிவித்துள்ள நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, “இது ஒரு ஏமாற்று வேலை” என்று கூறியுள்ளார்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், குறைந்தபட்ச வருவாய் உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் வீதம் ஆண்டுதோறும் ரூ.72 ஆயிரம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று அறிவித்தார். இந்த அறிவிப்பு அக்கட்சிக்கு ஆதரவு அலையை ஏற்படுத்தும் என்று ராகுல் காந்தி கருதுகிறார்.

“5 கோடி குடும்பங்களில் உள்ள 25 கோடி பேர், இத்திட்டத்தால் நேரடியாக பலன் பெறுவார்கள். இந்த திட்டத்தால் ஏற்படும் நிதி தாக்கத்தை காங்கிரஸ் கட்சி ஆய்வு செய்து விட்டது.

கடந்த சில மாதங்களாக எல்லா கணக்கீடுகளையும் போட்டுப் பார்த்து விட்டோம். புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி, இந்த திட்டத்தை இறுதி செய்து உள்ளோம்” என்று ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்தின் படி தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னர் பல விவசாயிகளுக்கு நிதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், ராகுல் காந்தியின் குறைந்தபட்ச வருவாய் உறுதி அளிப்பு திட்டம் பற்றி கருத்து தெரிவித்துள்ள நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72,000 என்ற காங்கிரஸ் அறிவிப்பு ஏமாற்று வேலை என்று கூறியுள்ளார்.“வறுமையை ஒழிப்பதை காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆயுதமாகப் பயன்படுத்துகிறதே தவிர இதுவரையில் அதற்காக ஒன்றும் செய்தது கிடையாது. இப்போது காங்கிரஸ் அறிவித்து இருக்கும் ரூ.72,000 அறிவிப்பு ஒரு ஏமாற்று வேலையாகும். ஆட்சியில் இருந்தபோது 2008-ல் விவசாயக் கடன் ரூ.72,000 கோடியைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தனர். ஆனால், ரூ.52,000 கோடிதான் தள்ளுபடி செய்தனர்.

ராகுல் காந்தி அறிவித்ததை விட 1.5 மடங்கு அதிகமாக பிரதமர் மோடியின் அரசு ஏழைகளுக்கு செய்துள்ளது.” என அருண் ஜெட்லி விமர்சனம் செய்துள்ளார்.

Also See....

First published: March 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...