Home /News /national /

’சுஷ்மாவின் வழியிலே...’ பெருமை தெரிவித்த அமைச்சர் ஜெய்சங்கர்!

’சுஷ்மாவின் வழியிலே...’ பெருமை தெரிவித்த அமைச்சர் ஜெய்சங்கர்!

அமைச்சர் ஜெய்சங்கர்

அமைச்சர் ஜெய்சங்கர்

புதிய அமைச்சகத்தில் வெளியுறவுத்துறை அமைச்சராக ஜெய்சங்கர் பொறுப்பேற்றுள்ளார்.

  • News18
  • Last Updated :
”முன்னாள் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வழித்தடத்தில் பின் தொடர்வது பெருமை அளிக்கிறது” எனப் புதிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

வெளியுறவுத்துறை அமைச்சராகக் கடந்த அமைச்சரவையில் பணியாற்றி வேற்றுமைகளையும் முரண்பாடுகளையும் கடந்து பலரது பாராட்டுகளையும் பெற்றவர் சுஷ்மா ஸ்வராஜ். சுஷ்மா இம்முறை அமைச்சரவையில் பதவி ஏதும் வகிக்கவில்லை.

இம்முறை புதிய அமைச்சகத்தில் வெளியுறவுத்துறை அமைச்சராக ஜெய்சங்கர் பொறுப்பேற்றுள்ளார்.

இவர் வெளியுறவுத்துறை அமைச்சராக தன் முதல் ட்விட்டர் பதிவில், “அனைவரது வாழ்த்துகளுக்கும் நன்றி. இந்தப் பொறுப்பை எனக்கு அளித்தமைக்கு நன்றி. சுஷ்மா ஸ்வராஜ் அவர்களின் வழியில் பின் தொடர்வது எனக்கு மிகவும் பெருமை அளிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பார்க்க: கல்லூரி விண்ணப்பத்தில் மதத்துக்குப் பதிலாக மனிதத்தை தேர்ந்தெடுக்கலாம்!
Published by:Rahini M
First published:

Tags: Modi Cabinet

அடுத்த செய்தி