Home /News /national /

பத்ம விருதுக்காக குலாம் நபி ஆசாத்தை கலாய்த்த சக காங்கிரஸ் தலைவர்..

பத்ம விருதுக்காக குலாம் நபி ஆசாத்தை கலாய்த்த சக காங்கிரஸ் தலைவர்..

Ghulam Nabi azad

Ghulam Nabi azad

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ், குலாம் நபி ஆசாத்தை கிண்டலடிக்கும் விதமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

    காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சக காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷை, குலாம் நபி ஆசாத்தை கிண்டலடித்து பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

    கலை, சமூக சேவை, பொது சேவை, அறிவியல், தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறைகளில் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி இந்த ஆண்டு 4 பேருக்கு பத்ம விபூஷன், 17 பேருக்கு பத்மபூஷன், 107 பேருக்கு பத்ம ஸ்ரீ என மொத்தம் 128 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எதிர்கட்சி முகாமைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சியின் புத்ததேப் பட்டாச்சார்யா, காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி ஆசாத் ஆகியோரின் பெயர்கள் இந்த பட்டியலில் இடம்பிடித்திருந்தது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவதாக அமைந்தது.

    இருப்பினும், மேற்குவங்க முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனின்ஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான புத்ததேப் பட்டாச்சார்யா, பத்மபூஷன் விருதை ஏற்க மறுத்துள்ளார். இது தொடர்பாக புத்ததேப் பட்டாச்சார்யா, வங்க மொழியில் வெளியிட்டிருந்த அறிக்கையில், “பத்ம பூஷன் விருது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அதைப் பற்றி யாரும் என்னிடம் எதுவும் சொல்லவில்லை. எனக்கு பத்மபூஷன் விருது கொடுத்திருந்தால். நான் அதை நிராகரிக்கிறேன்” இவ்வாறு தெரிவித்திருந்தார்.

    Also read:  பத்மபூஷன் விருதை புத்ததேப் பட்டாச்சார்யா ஏற்க மறுத்தது உண்மையா? - மாறுபட்ட தகவலால் குழப்பம்..

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி ஆசாத் தனக்கு பத்ம விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது குறித்து கூறுகையில், “அரசியலமைப்பின் ஒரு பகுதியாக வழங்கப்படும் இந்த விருதுகள் பெருமைக்குரியது.ஒருவரின் பொதுச் சேவைக்காக, எங்களின் எதிர்கட்சியால் நடத்தப்படும் அரசாங்கத்தால் கூட அங்கீகாரம் கிடைப்பது வரவேற்கத்தக்கது” என்றார்.

    பத்ம விருதுக்காக குலாம் நபி ஆசாத்தை, சக காங்கிரஸ் தலைவர்களான சசி தரூர், கபில் சிபல் போன்றோர் பாராட்டியுள்ளனர். அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ், குலாம் நபி ஆசாத்தை கிண்டலடிக்கும் விதமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.



    சிபிஎம் தலைவர் புத்ததேப் பட்டாச்சார்யா தனக்கு வழங்கப்படும் பத்மவிருதை புறக்கணித்த தகவலை சுட்டிக்காட்டி. “சரியான செயலை செய்திருக்கிறார். அவர் (புத்ததேப் பட்டாச்சார்யா) விடுதலை விரும்பி (ஆசாத்), மற்றவரை போல அடிமையல்ல (குலாம்)” என வார்த்தை விளையாட்டால் குலாம் நபி ஆசாத்தை மறைமுகமாக கடுமையாக சாடியுள்ளார்.

    Also read:  2021 உலகளாவிய ஊழல் குறியீடு: இந்தியா முன்னேற்றம் - பாகிஸ்தானுக்கு கடும் சரிவு..

    ஜெய்ராம் ரமேஷின் இந்த விமர்சனத்துக்கு பதிலடி தரும் வகையில், “பொது வாழ்வில் அவர் ஆற்றிய பங்களிப்பை தேசம் அங்கீகரிக்கும் போது காங்கிரஸுக்கு அவரது சேவை தேவையில்லை என்பது முரண்” என்று கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் தலைவர் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என வலியுறுத்தி சோனியாவுக்கு கடிதம் எழுதிய 23 காங்கிரஸ் தலைவர்களுள் குலாம் நபி ஆசாத் முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Arun
    First published:

    Tags: Congress, Padma Awards

    அடுத்த செய்தி