Home /News /national /

மத்திய சிறைக்குள் வெடித்த கலவரம்.. அதிகாரிகளை சிறைக்குள் சிறை வைத்த கைதிகள்.

மத்திய சிறைக்குள் வெடித்த கலவரம்.. அதிகாரிகளை சிறைக்குள் சிறை வைத்த கைதிகள்.

Prison

Prison

கைதிகளிடம் எவ்வளவோ பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் ஜெயிலர்களை விடுவிக்காமல் இருந்துள்ளனர். கண்ணீர் புகை குண்டுகளை வீசி எறிந்து கலவரத்தை கட்டுப்படுத்தும் முயற்சி தோல்வி

சக கைதி ஒருவரின் மரணத்தை அடுத்து ஜெயிலர்கள் இருவரை சிறை வளாகத்திற்குள் பிற கைதிகள் சிறை வைத்து, சிறையின் ஒரு பகுதியை தீக்கிரையாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பரூக்காபாத் மாவட்டத்தில் உள்ள ஃபதேகார் மத்திய சிறைச்சாலையில் இன்று காலை பெரும் கலவரம் வெடித்துள்ளது. சிறையில் உள்ள கைதிகள் கல் எறிந்து கலவரத்தில் ஈடுபட்டதுடன், சிறையின் ஒரு பகுதிக்கும் தீ வைத்துள்ளனர். கூடுதல் படைகள் வரவழைக்கப்பட்டு அதன் பின்னர் பெரும் சிரமப்பட்டு தான் சிறைத்துறையினர் இந்த கலவரத்தை கட்டுப்படுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கலவரத்துக்கு என்ன காரணம்?

ஃபதேகார் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதியான சந்தீப் குமார் என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததை தொடர்ந்தே சக கைதிகள் இன்று காலை கலவரத்தில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. விசாரணை கைதியான சந்தீப் குமார் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்திருக்கிறார். ஆனால் தாமதமாகவும், தவறான சிகிச்சை அளித்ததுமே சந்தீப் குமாரின் மறைவுக்கு காரணம் என சுட்டிக்காட்டி ஆத்திரத்தில் மற்ற கைதிகள் போராட்டத்தை தொடங்கியதாக கூறப்படுகிறது.

Also read:  பாகிஸ்தான் வெற்றியை மனைவி பட்டாசு வெடித்து கொண்டாடியதாக போலீசில் புகார் கொடுத்த கணவர்!

சிறையின் ஒரு பகுதியை தங்கள் கட்டுக்குள் வைத்திருந்த கைதிகள் துணை ஜெயிலர்களான அகிலேஷ் குமார், சைலேஷ் குமார் ஆகிய இருவரையும் மேலும் சில சிறை அதிகாரிகளையும் சிறைவைத்ததாக கூறப்படுகிறது. கைதிகளிடம் எவ்வளவோ பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் ஜெயிலர்களை விடுவிக்காமல் இருந்துள்ளனர்.

கண்ணீர் புகை குண்டுகளை வீசி எறிந்து கலவரத்தை கட்டுப்படுத்தும் முயற்சி தோல்வியில் முடிந்ததாகவும், கூடுதலாக போலீசாரும், சிறைத்துறையினரும் வரவழைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Also read:  Nz vs Afg போட்டியில் இது நடந்தால் இந்தியாவுக்கு அரையிறுதி வாய்ப்பு உள்ளது : சுனில் கவாஸ்கர்

பரூக்காபாத் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அஜய் பால் சிங் கூறுகையில், மூத்த காவல் கண்காணிப்பாளர் ஒருவரும், மாவட்ட மேஜிஸ்திரேட்டும் மத்திய சிறைச்சாலைக்கு சென்று கைதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்தார்.
Published by:Arun
First published:

Tags: Jail, Prison, Uttar pradesh

அடுத்த செய்தி