சசிகலாவை பார்க்க அனுமதி மறுப்பு- ஜெய் ஆனந்த் குற்றச்சாட்டு

சசிகலாவை பார்க்க அனுமதி மறுப்பு- ஜெய் ஆனந்த் குற்றச்சாட்டு

சசிகலா

சசிகலாவிற்கு உடனடியாக சிடி ஸ்கேன் எடுத்து பரிசோதனை செய்ய வேண்டும்.

  • Share this:
சசிகலாவை பார்க்கவும் அவருக்கு அளிக்கப்படும் பரிசோதனைகள் குறித்து தெளிவான தகவல் தெரிவிக்கவும் மருத்துவமனை நிர்வாகமும் காவல்துறையினரும் மறுப்பு தெரிவிப்பதாக சசிகலாவின் தம்பி மகனான ஜெய் ஆனந்த் திவாகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில், சசிகலாவிற்கு உடனடியாக சிடி ஸ்கேன் எடுத்து பரிசோதனை செய்ய வேண்டும் என ஜெய் ஆனந்த் நியூஸ்-18னிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க... ஆக்சிஜன் அளவு குறைந்தது: சசிகலா மீண்டும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

இம்மாதம் 27ஆம் தேதி விடுதலையாக இருக்கும் நிலையில், பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு பெங்களூருவில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் செலுத்தி அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சசிகலாவிற்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு சீராக இருப்பதாகவும், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 84 சதவீதமாக இருந்ததாகவும், இதனால்தான் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் தெரியவந்தது. எனவே அவருக்கு ஆக்சிஜன் செலுத்தி சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், அதிகாலை 4 மணி நிலவரப்படி சசிகலாவிற்கு ஆக்கிஜன் அளவு 97 சதவீதம் இருந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
Published by:Suresh V
First published: