Home /News /national /

நாட்டின் 14 ஆவது குடியரசுத் துணைத் தலைவராக ஜக்தீப் தங்கர் பதவியேற்றார்

நாட்டின் 14 ஆவது குடியரசுத் துணைத் தலைவராக ஜக்தீப் தங்கர் பதவியேற்றார்

துணை குடியரசுத் தலைவராக ஜக்தீப் தங்கர் பதவியேற்பு

துணை குடியரசுத் தலைவராக ஜக்தீப் தங்கர் பதவியேற்பு

Jagdeep Dhankhar | குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தங்கருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    நாட்டின் 14ஆவது குடியரசுத் துணைத் தலைவராக ஜக்தீப் தங்கர் இன்று பதவியேற்றார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஜக்தீப் தங்கருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    ஜக்தீப் தங்கர் இந்தி மொழியில் கடவுளின் பெயரால் தனது பதவிப் பிரமாணத்தை மேற்கொண்டார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, இதற்கு முன் குடியரசுத் துணை தலைவராக இருந்த வெங்கையா நாயுடு உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் பங்கேற்றனர்.


    முன்னதாக ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெற்ற குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் ஜகதீப் தன்கரும் (71), எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ராஜஸ்தான் முன்னாள் ஆளுநர் மார்கரெட் ஆல்வாவும் (80) போட்டியிட்டனர்.

    இதையும் படிங்க: நன்றி அண்ணா.. பீகாரில் ஆட்சி மாற்றம் - ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன தேஜஸ்வி யாதவ்

    நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்குப் பதிவில் மக்களவை மாநிலங்களவைச் சேர்ந்த 788 எம்பிக்கள் வாக்களித்தனர். அன்று மாலையே வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், ஜக்தீப் தங்கர் 528 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட மார்கரெட் ஆல்வாவுக்கு 182 வாக்குகள் தான் கிடைத்தது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜக்தீப் தங்கர் முக்கியத்துவம் வாய்ந்த ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராக இருந்துள்ளார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: President Droupadi Murmu, Vice President

    அடுத்த செய்தி