முகப்பு /செய்தி /இந்தியா / சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக மாநிலம் முழுவதும் பிரத்யேக காவல் நிலையங்கள் திறப்பு!

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக மாநிலம் முழுவதும் பிரத்யேக காவல் நிலையங்கள் திறப்பு!

ஆந்திர முதலமைச்சர்

ஆந்திர முதலமைச்சர்

முன்னெப்போதும் இல்லாத வகையில், பல சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Andhra Pradesh, India

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆந்திர பிரதேச அரசு மேலும் ஒரு நடவடிக்கையாக சுற்றுலா தலங்களில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சுற்றுலா காவல் நிலையங்களை அமைத்துள்ளது.

மாநிலம் முழுவதும் உள்ள 26 சுற்றுலா காவல் நிலையங்களை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று தடேபள்ளியில் உள்ள முகாம் அலுவலகத்தில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன்பின் பேசிய அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன், காவல் துறையின் கீழ் மேலும் ஒரு சிறந்த முன்னெடுப்பை செய்துள்ளதாக தெரிவித்தார். முன்னெப்போதும் இல்லாத வகையில், பல சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். காவல்துறை உங்கள் நண்பர்கள் என்ற கருத்தை கொண்டு வர முடிந்ததாகவும், இதுவரை இல்லாத வகையில் காவல்துறை அமைப்பில் மாற்றங்களை கொண்டு வந்ததாகவும் கூறினார். காவல் நிலையங்களில் வரவேற்பாளர்களை தங்க வைக்கும் திட்டத்தையும் முன்னெடுத்துள்ளதாக முதல்வர் குறிப்பிட்டார்.

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக 20 சுற்றுலா பகுதிகளில் இந்த சுற்றுலா காவல் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாக ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்தார். அதுமட்டுமின்றி, பக்தர்கள் பயமின்றி சுற்றுலா தலங்களில் நேரத்தை செலவிட இந்த காவல் நிலையங்கள் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

இதேபோல், விசாகா ஆர்.கே. கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலா காவல் நிலையத்தை முதல்வர் ஜெகன் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். போலீஸ் பூத்துடன், 10 இருசக்கர வாகனங்களும், இரண்டு ரோந்து வாகனங்களும் தொடங்கப்பட்டன.

First published:

Tags: Andhra cm, Andhra Pradesh, JaganMohan Reddy