Home /News /national /

தமிழகம் பத்து ஆண்டுகளாக பணம் தரவில்லை- ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன்!

தமிழகம் பத்து ஆண்டுகளாக பணம் தரவில்லை- ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன்!

தென்னிந்திய மாநாடு

தென்னிந்திய மாநாடு

சென்னையில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஆந்திரா தொடர்ந்து தண்ணீர் வழங்கி வருகிறது. ஆனால் ஆந்திராவுக்கு தர வேண்டிய 338.5 கோடி ரூபாயை தமிழகம் 10 ஆண்டுகளாக தரவில்லை என்று ஜெகன்மோகன் ரெட்டி கூறினார்.

    தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த திட்டத்தின் உள்கட்டமைப்பிற்காக ஆந்திராவுக்கு தரவேண்டிய 338.5 கோடி ரூபாயை பத்து ஆண்டுகளாக தமிழக அரசு தரவில்லை என்று ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தென்னிந்திய மாநாட்டில் தெரிவித்தார்.

    ஆந்திரப் பிரதேச மாநிலம் திருப்பதியில் உள்ள தாஜ் ஹோட்டலில் நேற்று தென் இந்திய மாநாடு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்றது.  தமிழகத்தின் வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்துவருவதால் அவருக்கு பதிலாக அமைச்சர் பொன்முடி இந்த மாநாட்டில் கலந்துகொண்டார்.

    மாநாட்டில் பேசிய ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, 1970ல் போடப்பட்ட மாநிலங்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தின்படி,  ஒருங்கிணைந்த ஆந்திரா பிரதேசம் (தெலங்கானா சேர்த்து), கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநலங்கள் தலா 5 ஆயிரம் மில்லியன் கன அடி தண்ணீரைட தமிழகத்திற்கு வழங்க வேண்டும்.  ஆனால் தற்போது மொத்த சுமையுன் ஆந்திராவின் தலையில் விழுந்துள்ளது.

    மேலும், சென்னையில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஆந்திரா தொடர்ந்து தண்ணீர் வழங்கி வருகிறது. ஆனால், ஆந்திர கங்கை திட்டத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான ரூ.338.5 கோடியை தமிழகம் கடந்த 10 ஆண்டுகளகா தரவில்லை.  இந்த தொகையை விரைவாக செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    இதை படிங்க: தென்மாநில பங்களிப்பு இல்லாமல் நாட்டின் முன்னேற்றம் இல்லை- அமித்ஷா


    பாலாறு திட்டம் காலத்தின் தேவையாக உள்ள நிலையில், தமிழக அரசு அதனை எதிர்த்து வருவதாகவும் ஜெகன்மோகன் தெரிவித்தார். ஆந்திர பிரதேசம் பிரிக்கப்பட்டபோது ஆந்திராவுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படும் என்று மத்திய அரசு தரப்பில் கூறபட்டது. 7 ஆண்டுகள் கழித்து தற்போதுவரை அது நிறைவேற்றப்படவில்லை. இதனால் நிதி இழப்பு மட்டுமல்லாது பிற மாநிலங்கள் உடனான உறவும் பாதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

    மேலும் படிக்க: சிபிஐ, அமலாக்கத் துறை தொடர்பாக மத்திய அரசு முக்கிய அவசர சட்டம்!

    Published by:Murugesh M
    First published:

    Tags: Andhra Pradesh, JaganMohan Reddy, Tamilnadu

    அடுத்த செய்தி