ஹோம் /நியூஸ் /இந்தியா /

சுகேஷ் சந்திரசேகர் மீதான் மோசடி வழக்கு.. நடிகை ஜாக்குலினுக்கு ஜாமீன்!

சுகேஷ் சந்திரசேகர் மீதான் மோசடி வழக்கு.. நடிகை ஜாக்குலினுக்கு ஜாமீன்!

ஜாக்குலின் - சுகேஷ் சந்திர சேகர்

ஜாக்குலின் - சுகேஷ் சந்திர சேகர்

சுகேஷ் சந்திரசேகர் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸுக்கு 10 கோடி அளவில் பரிசுப் பொருட்கள் வாங்கிக்கொடுத்துள்ளார்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Delhi, India

  சுகேஷ் சந்திரசேகர் மீதான ரூ. 200 கோடி பணமோசடி வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

  சுகேஷ் சந்திரசேகர் மீதான 200 கோடி பணமோசடி வழக்கில், அமலாக்க இயக்குனரகம் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். கைது செய்யப்படவில்லை எனினும் அவர் வெளிநாட்டிற்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

  சுகேஷ் சிறையில் இருந்தபோது ஜாக்குலின் அவருடன் பேசியதாகவும் கூறப்படுகிறது. கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர், அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பலரை ஏமாற்றி பண மோசடி செய்துள்ளார். தொழிலதிபர் ஒருவரை மிரட்டி 200 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கடந்த 2019-ஆம் ஆண்டு அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார் சுகேஷ். இது தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர், அவரது மனைவி லீனா மரியா பால் உள்ளிட்ட 6 பேர் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

  இந்த விசாரணையில் சுகேஷ் சந்திரசேகர் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸுக்கு 10 கோடி அளவில் பரிசுப் பொருட்கள் வாங்கிக்கொடுத்துள்ளார் என்பது தெரிய வந்தது. இந்நிலையில் இந்த மோசடி வழக்கு தொடர்பாக கடந்த ஆக்ஸ்ட் மாதம் டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் நடிகை ஜாக்குலின் ஃபெர்னான்டஸையும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.

  இந்த வழக்கில் ஜாமீன் கோரி, டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த ஜாக்குலின், விசாரணை நிறைவடைந்துவிட்டதால், தன்னைக் காவலில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Delhi High Court, Jacqueline Fernandez