Home /News /national /

உணவு டெலிவரி செய்யும் ஊழியரை ஷூவால் அடித்த பெண் - பிரச்சனைக்கு காரணம் இதுதான்!

உணவு டெலிவரி செய்யும் ஊழியரை ஷூவால் அடித்த பெண் - பிரச்சனைக்கு காரணம் இதுதான்!

கடந்த ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவில் இதேபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

கடந்த ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவில் இதேபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

கடந்த ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவில் இதேபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

    உணவு டெலிவரி நிறுவன ஊழியரை பெண் ஒருவர் ஷூ-வால் அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரல் ஆகி கொண்டிருக்கிறது. மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஜபல்பூரில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    டெலிவரி நிறுவன ஊழியர் ஓட்டி சென்ற பைக், பெண்ணின் ஸ்கூட்டர் மீது இடித்ததால் ஆத்திரமடைந்த அந்த பெண் இவ்வாறு தாக்குதல் நடத்தியதாக ‘ஃப்ரி பிரெஸ் ஜெர்னல்’ என்ற ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. வன்முறையில் ஈடுபட்ட பெண் யார் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.

    அந்த பெண், ஜபல்பூரின் ரூசெல் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அவர் பயணம் செய்தது ஒருவழிப் பாதை ஆகும். அப்போது, எதிர் திசையில் தவறாக வந்த டெலிவரி ஊழியர் இந்தப் பெண்ணின் வாகனத்தின் மீது மோதி விட்டார். இதை தொடர்ந்து, அந்த பெண் சாலையில் தடுமாறி விழுந்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர், ஷூவை கழற்றி அந்த நபரை கண்டபடி அடித்து விட்டார்.

    Read More : இளைஞரின் முதுகில் வால் போல வளர்ந்துள்ள முடி - கடவுளின் அவதாரம் என கூறும் பொதுமக்கள்!


    அப்போது அருகில் உள்ள மக்கள் அந்தப் பெண்ணை சமாதானம் செய்து, அந்த நபரை அங்கிருந்து அனுப்பி வைக்க முயற்சி செய்தனர். ஆனால், அப்போதும் ஆத்திரம் அடங்காத அந்தப் பெண், யார் சொல்வதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் தொடர்ந்து ஷூவால் அடித்துக் கொண்டிருந்தார். ஆனால், வாகனங்கள் இரண்டும் மோதிக் கொண்டபோது அந்தப் பெண், ஃபோனில் பேசிக் கொண்டு இருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.




    காவல் நிலையத்தில் வழக்கு பதியவில்லை :

    இந்த சம்பவம் குறித்த ஃபோட்டோ மற்றும் வீடியோ ஆகியவை வைரல் ஆகியுள்ள போதிலும், இதுகுறித்து புகார் எதுவும் வரவில்லை என்ற சூழலில் காவல்துறையினர் இதுவரையிலும் வழக்குப்பதிவு செய்யவில்லை. எனினும், புகார் அளிக்கப்பட்டால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

    பொது இடங்களில் தொடர்ந்து நடைபெறும் அத்துமீறல் :

    கடந்த ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவில் இதேபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்தது. டாக்ஸி ஓட்டுநர் ஒருவரை பெண் ஒருவர் ஓங்கி அறைந்து விட்டார். அப்போது டாக்ஸி ஓட்டுநருக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் குரல் கொடுத்தனர். இதற்கிடையே, தொடர்புடைய பெண்ணுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து சிசிடிவி பதிவு ஒன்றை ஆய்வு செய்ததிலும் டாக்ஸி ஓட்டுநர் மீது எந்த தவறும் இல்லை என்பது தெரிய வந்தது.

    அதே பெண் தொடர்புடைய மற்றொரு வீடியோ ஒன்று மீண்டும் சில நாட்களில் வைரல் ஆனது. அந்த வீடியோவில் வீட்டுக்கு அருகாமையில் உள்ள மக்களுடன் அந்த பெண் வாக்குவாதம் செய்வதும், பக்கத்து வீட்டுக்காரர்களை மிரட்டி வைக்க வேண்டி இப்படி நடந்து கொண்டதும் தெரியவந்தது.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: India, Madhya pradesh, Trending, Viral

    அடுத்த செய்தி