திருமணம் செய்யாமலேயே ஒன்றாக வாழும் முறைகள் காரணமாக பாலியல் குற்றங்கள் அதிகம் நடைபெறுவதாக மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வந்துள்ளார். அப்போது இரண்டு முறை அவர் கரு தரித்தபோதும் தனது துணையின் அழுத்தம் காரணமாக கருகலைப்பு செய்துள்ளார். இதனிடையே, லிவ் இன் டூகெதர் உறவு கசந்ததால், தனது துணையை அப்பெண் பிரிந்துள்ளார்.
பின்னர், அவருக்கு வேறொரு ஆணுடன் திருமணம் நிச்சயக்கப்பட்டது. அப்போது, அப்பெண்ணின் ஆண் நண்பரை அவரை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். நிச்சயப்பட்ட ஆணின் பெற்றோருக்கு வீடியோக்களை அவர் அனுப்பியுள்ளார். திருமணம் நடைபெற்றால் தான் தற்கொலை செய்துகொள்வேன் என்றும் இதற்கு நீங்களும் காரணம் என்றும் மிரட்டியுள்ளார்.
இதன் காரணமாக திருமணம் நின்றுபோனது. இதனிடையே, அப்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ததாக ஆண் நண்பர் மீது வழக்குப் பதியப்பட்டது. கைது செய்யப்படாமல் இருக்க அவர் தாக்கல் செய்த முன் ஜாமின் மனு மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுபோத் அபியங்கர், திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் உறவுகளால் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: வேலையில் இருப்பவரை கல்யாணம் செஞ்சிக்கோ... விரக்தியில் மனைவிக்கு மேசேஜ் அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை
சட்டப்பிரிவு பிரிவு 21 வாழ்வதற்கான உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் ஆகியவற்றை தருகிறது. இந்தச் சுதந்திரத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள் அதை விரைவாக ஏற்றுக்கொள்கிறார்கள், ஆனால் அதற்கு அதன் சொந்த வரம்புகள் உள்ளன என்பதை முற்றிலும் அறியாமல் உள்ளனர். மேலும் அத்தகைய உறவுகள் துணை மீது எவ்வித உரிமையையும் வழங்கவில்லை என்று குறிப்பிட்டார். மேலும் இளைஞரின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.