குடியுரிமை கணக்கெடுப்பு.. மத்திய உள்துறை அமைச்சக அரசாணையை எதிர்த்து இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் வழக்கு

உச்ச நீதிமன்றம்

5 மாநிலங்களில் 13 மாவட்டங்களில் குடியுரிமை கணக்கெடுப்பை நடத்ததும் படி அந்தந்த மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

 • Share this:
  மத்திய அரசானது தனக்கு இருந்த பெரும்பான்மையை கொண்டு 2019-ம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தை பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதனை எதிர்த்து தலைநகர் டெல்லியில் போராட்டங்கள் வெடித்தது. கடும் குளிருக்கு மத்தியில் மக்கள் டெல்லியின் வீதிகளில் திரண்டனர். பல்வேறு மாநில அரசுகளும் இந்தச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது. அசாம், மேற்குவங்கம், டெல்லியில் கலவரம் வெடித்தது. தொடர் போராட்டங்கள், 5 மாநில தேர்தலின் காரணமாக இந்த சட்டத்தை உடனடியாக மத்திய அரசால் செயல்படுத்த முடியவில்லை. கொரோனா தொற்று மத்திய அரசுக்கு பெரும் தலைவலியாக இருந்ததால் இந்தச்சட்டம் கிடப்பில் போடப்பட்டது.

  இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அரசாணை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, சட்டீஷ்கர் ஆகிய மாநிலங்களில் 13 மாவட்டங்களில் குடியுரிமை கணக்கெடுப்பை நடத்ததும் படி அந்தந்த மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்க தேசம் ஆகிய மூன்று நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், கிருஸ்தவர்கள், ஜைன மதத்தினர், பார்சி ஆகியோர் குறித்த கணக்குகளை சேகரிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சக அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

  இதனை எதிர்த்து இந்திய யூனியன் முஸ்லீக் லீக் கட்சி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் ஐந்து மாநிலங்களில் குடியுரிமை கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சக அரசாணையை ரத்துசெய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Ramprasath H
  First published: