முகப்பு /செய்தி /இந்தியா / லண்டனில் இருந்துகொண்டு கேள்வி எழுப்புவதா...? ராகுலை விமர்சித்த பிரதமர் மோடி..!

லண்டனில் இருந்துகொண்டு கேள்வி எழுப்புவதா...? ராகுலை விமர்சித்த பிரதமர் மோடி..!

பிரதமர் மோடி - ராகுல் காந்தி

பிரதமர் மோடி - ராகுல் காந்தி

உலகின் எந்த சக்தியாலும் இந்தியாவின் ஜனநாயகத்தை கெடுக்க முடியாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடகாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, ஹூப்ளியில் உலகின் நீண்ட ரயில் நடைமேடையை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவின் ஜனநாயகம் குறித்து சிலர் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருவதாக குறிப்பிட்டுள்ளார். உலகின் எந்த சக்தியாலும் இந்தியாவின் ஜனநாயகத்தை கெடுக்க முடியாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

லண்டனில் உள்ள ராகுல் காந்தி மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கேள்விகளை முன்வைத்திருந்தார். மேலும் இந்தியாவின் அடிப்படை தத்துவங்களை பாதுகாக்கவும் நம் ஜனநாயகத்தை காப்பாற்றவும் உலகில் உள்ள அனைத்து இந்தியர்களும் குரல் கொடுப்பது அவர்களிம் கடமையாகும் என கூறியிருந்தார்.

மேலும் பிபிசி ஆவணப்படத்தையும், பிபிசி அலுவலகத்தில் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனைகளையும் குறிப்பிட்டு ‘ஜனநாயகத்தின் குரல்கள் நசுக்கப்படுவதாக’ தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க :  ”இப்போலாம் எம்.பிக்களுக்கு மரியாதையே இல்லை”... திருமாவளவன் கலகல பேச்சு..!

இந்த நிலையில், அதற்கு பதில் அளிக்கும் விதமாக மோடி உரையாற்றியுள்ளார். முன்னதாக ஐ.ஐ.டி. தார்வாத்தில் புதிய கட்டடம் ஒன்றை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதே போன்று பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

First published:

Tags: BBC, Karnataka, PM Narendra Modi, Rahul Gandhi