Home /News /national /

உலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது! மத்திய அமைச்சர்

உலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது! மத்திய அமைச்சர்

ரவிசங்கர் பிரசாத்

ரவிசங்கர் பிரசாத்

வணிகம் செய்வதற்கு உகந்த நாடு என்ற பட்டியலில் இருந்து பாகிஸ்தானை இந்தியா நீக்கியது.

  • News18
  • Last Updated :
    உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் நாட்டுடன் விளையாட மாட்டோம் என சொல்ல வேண்டிய நேரம் இது என்று மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

    காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலின் காரணமாக பாகிஸ்தானுக்கு இந்தியா கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துவருகிறது. வணிகம் செய்வதற்கு உகந்த நாடு என்ற பட்டியலில் இருந்து பாகிஸ்தானை இந்தியா நீக்கியது.

    தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்த ஆண்டு மே 30-ம் தேதி தொடங்கவுள்ள உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது என்று நாடு முழுவதும் கோரிக்கைகள் எழுந்துவந்தன.

    இந்தநிலையில் டெல்லியில் பேசிய மத்திய சட்டஅமைச்சர் ரவி சங்கர் பிரசாத், ‘பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை இந்தியா புறக்கணிக்கவேண்டும் என்று எழும் குரல்களை தற்போது நியாயப்படுத்தமுடிகிறது. கிரிக்கெட் விளையாட்டுத் தொடர்பாக என்னால் எந்தக் கருத்தும் தெரிவிக்க முடியாது. ஆனால், உலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது என்று எழும் கோரிக்கைகள் நியாயமானவை என்று மட்டும் கூறிக் கொள்கிறேன்.

    பல படங்களும், நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதை நீங்கள் பார்க்கலாம். இரு நாடுகளுக்கு இடையே இருக்கும் விவகாரம் சாதரணமானது அல்ல. இது சர்வதேச தொடராக இருந்தாலும், இந்த விவகாரம் குறித்து ஐ.சி.சி மற்றும் பி.சி.சி.ஐ கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும்.

    பாகிஸ்தானுடன் விளையாட மாட்டோம் என்று கூற வேண்டிய நேரம் இது. தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை’ என்று தெரிவித்தார். 2012-ம் ஆண்டுக்கு பிறகு, இந்தியா, பாகிஸ்தான் மட்டும் எந்தத் தொடரிலும் போட்டியிடவில்லை.

    Also see:

    Published by:Karthick S
    First published:

    Tags: Law Minister Ravi Shankar Prasad

    அடுத்த செய்தி