மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை களமிறக்கிய பா.ஜ.க!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் 6-வது கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய சிங் போட்டியிடுகிறார்.

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை களமிறக்கிய பா.ஜ.க!
சாத்வி பிரக்யா சிங் தாகுர்
  • News18
  • Last Updated: April 17, 2019, 10:03 PM IST
  • Share this:
மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக குற்றம் சுமத்தப்பட்ட சாத்வி பிரக்யா தாகுர் போபால் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளராக போட்டியிடுகிறார்.

மக்களவைத் தேர்தல் முன்னிட்டு நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. நாடு முழுவதும் மொத்தம் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. எனவே, வேட்பாளர்கள் பட்டியல் தொகுதி வாரியாக அறிவிக்கப்பட்டுவருகிறது.

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் 6-வது கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய சிங் போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் உமா பாரதி, நரேந்திர சிங் தோனம், சிவராஜ் சிங் சௌஹான் யாரேனும் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.


ராஜ்நாத் சிங்குக்கு எதிராக வீயூகம் வகுத்த எதிர்க்கட்சிகள்: லக்னோ தொகுதி கள நிலவரம்

ஆனால், இந்த வேட்பாளர்கள் போபாலில் போட்டியிடுவதற்கு விருப்பம் காட்டவில்லை என்று தெரிகிறது. இந்தநிலையில், போபால் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளராக சாத்வி பிரக்யா தாகுர் போட்டியிடுகிறார். 2006-ம் ஆண்டு மாலேகான் பகுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பு வழக்கில் முக்கியக் குற்றவாளியாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டவர் பிரக்யா தாகுர்.

அந்த குண்டு வெடிப்பில் ஆறு பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த குண்டு வெடிப்பு வழக்கில் தாகுர், தீவிரவாத தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்தார். அவர், தற்போது ஜாமினில் வெளிவந்துள்ளார். அவர் மீதான வழக்கு இப்போதும் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see:

First published: April 17, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading