கேரள சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்று ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ள நிலையில், இது வெற்றியை கொண்டாடுவதற்கான நேரமில்லை என்றும் கொரோனா தொற்று வேகமாக பரவிவருவதாகவும் முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கம் , புதுச்சேரி, ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல், மார்ச் 27ஆம் தேதி தொடங்கி பல்வேறு கட்டங்களாக நடந்து முடிந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலையில் தொடங்கி எண்ணப்பட்டு வருகின்றன.
கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதையடுத்து பல்வேறு தலைவர்களுக்கு முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தல் முடிவு தொடர்பாக முதலமைச்சர் பினராயின் விஜயன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், பாஜக தலைவர்கள் கேரளாவில் ஆட்சி அமைக்கப்போவதாக தெரிவித்து வந்தனர். அதே நேரத்தில், கேரள சட்டப்பேரவையில் அவர்களுக்கு இருக்கும் எண்ணிக்கையை முழுமையாக இந்த தேர்தலில் குறைப்போம் என்று நாங்கள் கூறினோம்.
நாங்கள் பெற்றுள்ள வெற்றியை கேரள மக்களுக்கு அர்ப்பணிக்கிறோம். எனினும், வெற்றியை கொண்டாடும் நேரம் இதுவல்ல. கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. வைரஸ் தொற்றுக்கு எதிராக போரிட வேண்டிய காலமிது.
இன்று ஒரே நாளில் 31,950 புதிய தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 49 பேர் உயிரிழந்துள்ளனர்” என்று தெரிவித்தார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona, Covid-19, Election 2021, Election Result, Pinarayi vijayan