நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக மம்தா பானர்ஜி அறிவிப்பு!

பிரதமர் மோடி அரசு மீண்டும் பதவியேற்றுள்ள நிலையில் முதல் நிதி அயோக் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Web Desk | news18
Updated: June 7, 2019, 1:06 PM IST
நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக மம்தா பானர்ஜி அறிவிப்பு!
மம்தா பானர்ஜி
Web Desk | news18
Updated: June 7, 2019, 1:06 PM IST
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வரும் 15-ம் தேதி நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

நிதி ஆயோக் அமைப்பின் 5-வது கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வரும் 15-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் இந்த கூட்டத்தில் நீர் மேலாண்மை, விவசாயம், பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


பிரதமர் மோடி.


இந்நிலையில் பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் நிதி ஆயோக் அமைப்புக்கு எந்தவிதமான நிதி அதிகாரமும் இல்லை என்றும், மாநில திட்டங்களுக்கு துணைபுரியும் அதிகாரமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

எனவே நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பது பயனுள்ளதாக இருக்காது என தான் கருதுவதாகவும் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

Loading...

பிரதமர் மோடி அரசு மீண்டும் பதவியேற்றுள்ள நிலையில் முதல் நிதி அயோக் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also see... ஜெய் ஸ்ரீராம் என கோஷம்... கடுப்பாகி வாக்குவாதம் செய்த மம்தா பானர்ஜ...!

Also see...
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see...
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...