முகப்பு /செய்தி /இந்தியா / உடன்கட்டை ஏற்றுதலை பெருமையாக பேசுவது வெட்கப்பட வேண்டிய செயல் - நாடாளுமன்றத்தில் கனிமொழி பேச்சு

உடன்கட்டை ஏற்றுதலை பெருமையாக பேசுவது வெட்கப்பட வேண்டிய செயல் - நாடாளுமன்றத்தில் கனிமொழி பேச்சு

கனிமொழி

கனிமொழி

4 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய நிலையில், இதுவரை பணிகள் தொடங்கவில்லை - கனிமொழி

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

ஆளுநர்களுக்கு அரசியல் சாசனத்தையும் கூட்டாட்சி முறையையும் கற்பிக்க வேண்டும் என்று திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார்.

மக்களவையில் பேசிய திமுக எம்.பி.கனிமொழி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 20 மசோதாக்களுக்கு இதுவரை ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை எனக் கூறினார். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள், அரசுடன் மோதல் போக்கை கையாள்வதாகவும் மாநிலங்களின் நலன், மாநிலங்களின் உரிமைகளை மத்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் கனிமொழி தெரிவித்தார்.

சர்வாதிகாரத்தை நோக்கி மத்திய அரசு சென்று கொண்டிருப்பதாக விமர்சித்த கனிமொழி, 100 நாள் வேலைதிட்டத்திற்கு போதிய நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டினார். நாடு முழுவதும் வேலையில்லாத திண்டாட்டம் அதிகரித்து வருவதாகவும், சுமார் 4 கோடி இளைஞர்கள் வேலைவாய்ப்பை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் கூறினார்.

4 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய நிலையில், இதுவரை பணிகள் தொடங்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார். மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்த பாஜகவின் தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

உடன்கட்டை ஏறுவதை  பாஜக எம்பி பெருமையாக பேசியதற்கு பதிலளித்த அவர், “இந்த தேசத்தின் பெருமை குறித்து பேசும் போது கவுரவத்தின் பெயரில் பெண்கள் தீயில் தள்ளப்பட்டதை உடன்கட்டை ஏற்றபட்டதை பெருமையாக பேசுகின்றனர். இதனை கண்டு நாங்கள் அவமானத்தில் தலை குனிகிறோம்” என கூறினார்.

First published:

Tags: Kanimozhi, Lok sabha, Parliament