2023ஆம் ஆண்டின் மத்திய பட்ஜெட்டானது நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், இன்று காலை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்றது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டுகூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார்.
திரெளபதி முர்மு இந்தியாவின் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதல் பட்ஜெட் கூட்டம் இதுவாகும். குடியரசுத் தலைவரின் உரையை ஆம் ஆத்மி, பாரதிய ராஷ்ட்ரிய சமிதி போன்ற எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.
இதற்கிடையே குடியரசுத் தலைவர் உரையாற்றினார். அவரது உரையில், தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவை பல வகைகளில் உலக நாடுகள் எதிர்நோக்கியுள்ளன. அரசு அனைத்து வகுப்பினருக்கும் எந்த பாகுபாடும் இன்றி உழைத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அரசின் முயற்சியின் பலனாக, பல அடிப்படை வசதிகள் முழுமை பெற்றுள்ளன என உரையாற்றினார்.
ஊழலை ஒழிக்க அரசு பல சட்டங்களை இயற்றியுள்ளதாகவும் ஊழல் இல்லா நாடாக இந்தியா மாறும் எனவும் திரெளபதி முர்மு தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். மேலும், ஏழைகளுக்காகவும், சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் அரசு தீவிரமாக பணியாற்றி வருவதாக பேசியிருந்தார்.
குடியரசுத் தலைவரின் இந்த உரை குறித்து விமர்சித்த காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட மாட்டார். ஆனால், பாஜக அரசு தனது அடுத்த தேர்தல் பிரசாரத்தை அவர் மூலம் தொடங்கியது போல் தெரிகிறது. குடியரசுத் தலைவரின் முழுப் பேச்சும் தேர்தல் உரையாக இருந்தது. அரசாங்கம் செய்த அனைத்திற்கும் அதைப் புகழ்ந்தும், அது சிறப்பாகச் செய்யாததைத் தவித்தும் பேசப்பட்டுள்ளது என கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Shashi tharoor, Union Budget 2023