மாநில அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு கட்டாயமில்லை - உச்ச நீதிமன்றம்

மாநில அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு கட்டாயமில்லை - உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
  • News18
  • Last Updated: February 9, 2020, 8:06 AM IST
  • Share this:
மாநில அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு வழங்க வேண்டியது கட்டாயமில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்காமல் அரசு காலிப்பணியிடங்களை நிரப்பும் முடிவிற்கு எதிராக அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உத்தரகாண்ட் அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதனை எல். நாகேஸ்வரா ராவ், ஹேமந்த் குப்தா அமர்வு விசாரித்து வருகிறது. அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு வழங்குவதை அடிப்படை உரிமையாக கோர முடியாது என அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளதாக உத்தரகாண்ட் மாநில அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.


அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், பதவி உயர்விற்கும் அது பொருந்தும் என தெரிவித்தனர்.
First published: February 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்