ஹோம் /நியூஸ் /இந்தியா /

மனைவியை காப்பாற்ற வேண்டியது கணவனின் கடமை.. தட்டி கழிக்க முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

மனைவியை காப்பாற்ற வேண்டியது கணவனின் கடமை.. தட்டி கழிக்க முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

கோப்பு படம்

கோப்பு படம்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Delhi, India

  உடல் உழைப்பின் மூலமாவது மனைவியையும் குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டியது கணவனின் கடமை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தன் கடமையை ஓர் ஆண் தவிர்க்க முடியாது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

  தனது தொழில் முடங்கியதால் முன்னாள் மனைவி மற்றும் மகனுக்கு, மாதம் ரூ. 16 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி மற்றும் பேலா திரிவேதி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரிந்து வாழும் மனைவி மற்றும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, நிதி உதவி வழங்கும் புனிதமான கடமையை ஒருவர் மீறக்கூடாது என நீதிபதிகள் கூறினர். ஜீவனாம்சம் வழங்குவது என்பது சமூகநீதியின் ஒரு அங்கம் எனவும் நீதிபதிகள் வலியுறுத்தினர்.

  கணவரின் மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதிகள் சிஆர்பிசி பிரிவு 125-ன் கீழ் மனைவிக்கும், மைனர் குழந்தைக்கும் பராமரிப்புச் செலவை வழங்குவது சமூக நீதியாகும். இச்சட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாதுகாப்பதற்காகச் சிறப்பாக இயற்றப்பட்டது என்றும் தெரிவித்தனர்.

  கணவர் திறமையானவராக இருப்பதால், அவர் முறையான வழிகளில் சம்பாதிக்கவும், தன் மனைவி மற்றும் மைனர் குழந்தையைப் பராமரிக்கவும் கடமைப்பட்டிருக்கிறார் என்றும் நீதிபதிகள் கூறினர்.

  கணவருடைய வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலைமையில் இருக்கிற ஒரு பெண்ணின் வேதனையையும், அவருடைய பொருளாதார நெருக்கடியையும் தணிப்பதற்காகவே 'சிஆர்பிசி பிரிவு 125' வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறிய நீதிமன்றம். சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்ட காரணங்களைத் தவிர்த்து, தன்னுடைய கடமையை, சம்பந்தப்பட்ட ஆண் தவிர்க்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

  இதையும் வாசிக்க: பெற்ற மகளையே மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை - அதிர்ச்சி சம்பவம்

  கணவன் பராமரிக்க வேண்டும் என்ற உத்தரவு அவரை தண்டிப்பதற்காக அல்ல என்றும் ஒரு மனைவி இருப்பிடம் இல்லாமல் தவிப்பதை தடுக்கவும் அவருக்கு உணவு, உடை மற்றும் தங்குமிடம் ஆகியவற்றை வழங்குவதற்குமே என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Divorce, Husband Wife, Supreme court