ஐக்கிய அரபு அமீரகத்தின் ரூ.700 கோடி நிதியை ஏற்க மத்திய அரசு மறுப்பு?

ஐக்கிய அரபு அமீரகத்தின் ரூ.700 கோடி நிதியை ஏற்க மத்திய அரசு மறுப்பு?
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: August 22, 2018, 8:42 PM IST
  • Share this:
கேரள வெள்ள நிவாரணத்துக்காக ஐக்கிய அரபு அமீரகம் வழங்க முன்வந்துள்ள 700 கோடி ரூபாயை மத்திய அரசு ஏற்காது எனறு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2013-ம் ஆண்டில், உத்தரகாண்டில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது, ரஷ்யாவின் உதவியை இந்தியா ஏற்க மறுத்தது. இந்நிலையில், ஐக்கிய அரசு அமீரகம் வழங்க முன்வந்துள்ள 700 கோடி ரூபாயை பெற வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை நாமே மேற்கொள்வது என்பதையே கொள்கையாக பின்பற்றி வருவதாக வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில், எந்த மாற்றமும் இல்லை என்றும், இதனடிப்படையில், நிதியுதவியைப் பெற மாட்டோம் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.


ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிகளவில் வசிக்கும் கேரள மக்கள், தங்கள் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவை கருத்தில் கொண்டு அந்நாட்டு அரசுகளிடம் கோரிக்கை வைத்து இந்த நிதியை ஏற்பாடு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
First published: August 22, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading