இந்தியாவின் நிதி அமைச்சகம், பிபிசியின் பெயரை குறிப்பிடாமல், “ஒரு முக்கிய சர்வதேச ஊடக நிறுவனத்தின் வரி அறிவிப்புகளில் முரண்பாடுகளை காட்டும் முக்கிய ஆதாரங்களை அதன் வரி ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்” என்ற செய்தியை வெளியிட்டுள்ளது.
உலக அளவில் பெரிய தொலைக்காட்சி அலைவரிசை சேவையில் ஈடுபட்டு வரும் பிபிசி நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியை தொடர்புபடுத்தி ஒரு ஆவணப் படத்தை ஒளிபரப்பியது. இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. அதோடு அந்த ஆவணப் படத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் பிப்ரவரி 14 அன்று பிபிசியின் மும்பை மற்றும் டெல்லி அலுவலகங்கள் வருமான வரித் துறையினரால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இது ஒரு அரசியல் நடவடிக்கை, பழிவாங்கும் முயற்சி என்று எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டது.
இதில் பத்திரிகையாளர்கள் மற்றும் கணக்காளர்கள் ஒரே மாதிரியாக விசாரிக்கப்பட்டதாகவும் அவர்களின் தொலைபேசிகள் மற்றும் மடிக்கணினிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். சோதனை காரணமாக சிலர் இரண்டு இரவுகள் தங்கள் அலுவலகத்தில் தூங்கியுள்ளனர்.
தொடர்ந்து 60 மணிநேரம் நடந்த சோதனை கடந்த வியாழன் - பிப்ரவரி 16 அன்று இரவு முடிவுக்கு வந்தது. அதன் இறுதியில் "பல்வேறு பிபிசி நிறுவனங்களால் காட்டப்படும் வருமானம் / லாபம், இந்தியாவின் அவற்றின் செயல்பாடுகளின் அளவோடு ஒத்துப்போவதில்லை என்று கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. ஊழியர்களின் அறிக்கை, டிஜிட்டல் ஆதாரம் மற்றும் ஆவணங்கள் மூலம் வருமான வரித்துறையினர் முக்கியமான ஆதாரங்களை கண்டுபிடித்தனர்" என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது .
இந்தியாவில் வருமானமாக வெளியிடப்படாத சில பணப்பரிமாற்றங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதுபோக சில பரிமாற்றங்களுக்கு பிபிசி குழுமம் வரி செலுத்தவில்லை என்பது குறிக்கும் பல ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.