• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • வாடகைக்கு வீடு தேடும் பெண்களே உஷார்.. ஐடி ஊழியருக்கு ஆன்லைனில் வந்த பாலியல் தொல்லை

வாடகைக்கு வீடு தேடும் பெண்களே உஷார்.. ஐடி ஊழியருக்கு ஆன்லைனில் வந்த பாலியல் தொல்லை

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

மும்பையில் வீடு தேடிய பெண்ணிடம் ஆபாசமாக பேசிய நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

  • Share this:
    மும்பையில் வாடகைக்கு வீடு தேடிய பெண் ஐடி ஊழியரிடம் ஆபாசமாக பேசி அவரை கொலை செய்து விடுவேன் என மிரட்டிய நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

    குஜராத்தை சேர்ந்த 27வயதான பெண் ஒருவர் மும்பையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக  அலுவலகத்தில் வீட்டில் இருந்து வேலை பார்க்க அறிவுறுத்தியுள்ளனர். இதன்காரணமாக சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தநிலையில் மீண்டும் அவரை மும்பை அலுவலகத்தில் வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர். அவர் மும்பையில் ஏற்கனவே தங்கியிருந்த வீட்டை காலி செய்ததால் மீண்டும் வேறு புதிய வீடு தேடவேண்டிய சூழல் ஏற்பட்டது.

    Also Read:  வெள்ளி கொலுசுக்காக கால்களை வெட்டிய திருடன்.. காட்டுப்பகுதியில் சடலமாக கிடந்த பெண்

    அந்தப்பெண் இதுவரை ஃபேஸ்புக் பயன்படுத்தியதில்லை. வீடு தேட வேண்டும் என்பதற்காக பேஸ்புக்கில் அக்கவுண்ட் தொடங்கியுள்ளார். சில ரியல் எஸ்டேட் பேஸ்புக் அக்கவுண்ட்களை பின் தொடர்ந்துள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் வீடு வாடகைக்கு வேண்டும் என்றும் எந்த ஏரியா வீடு எப்படி வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் பேஸ்புக் மூலம் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். அவர் அந்தப்பெண்ணிடம் புரோக்கர் போன்று பேசியுள்ளார். உங்களுக்கு என்ன மாதிரியான வீடு வேண்டும், என்ன பட்ஜெட் எப்படி பார்க்கிறீர்கள். தனியா வீடு வேண்டுமா.. இல்லை ரூம் ஷேரிங் போன்று வீடு வேண்டுமா எனக் கேட்டுள்ளார்.

    இதுபோன்று பேசி அந்தப்பெண்ணின் மொபைல் எண்ணை வாங்கியுள்ளார். அதன்பின் அவரது வாட்ஸ் அப் நம்பருக்கு ஒரு வீட்டின் வீடியோ ஒன்று அனுப்பியுள்ளார். அந்த வீடு ஓகே வா என்று கேட்டுள்ளார். அந்தப்பெண் வாடகை குறித்து விசாரிக்க தொடங்கியது. அந்த நபரின் பேச்சு வேறு விதமாக இருந்துள்ளது. இது என்னுடைய வீடுதான் வாடகை எல்லாம் கொடுக்க வேண்டாம். நான் விருப்பப்படும்போது என்னுடன் இனி தனிமையில் இருந்தால் போதும் என ஆபாசமாக பேசியுள்ளார். இதனையடுத்து அந்தப்பெண் இணைப்பை துண்டித்துள்ளார். உன்னுடைய செலவுகளை எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன் நீ எனக்கு விருப்பமாக இருந்தால் போதும் என மெஜேஷ் செய்து டார்ச்சர் செய்துள்ளார்.

    Also Read:  மகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த தந்தை - போலீஸாரை மிரள வைத்த வாக்குமூலம்

    இதனையடுத்து அந்தப்பெண் அவரது எண்ணை ப்ளாக் செய்துள்ளார். ஃபேஸ்புக் மூலம் தொடர்புகொண்டு நான் சொல்வதை கேட்கவில்லை என்றால் உன்னுடைய போட்டோவை வைத்து அக்கவுண்ட் ஓபன் செய்து விபாச்சாரத்தில் ஈடுபடுபவர் போல் சித்தரித்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். உடனடியாக அந்தப்பெண் மும்பை காவல்துறையின் ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து புகார் தெரிவித்துள்ளார். காவல்நிலையத்தில் சென்று புகார் அளிக்குமாறு அந்தப்பெண்ணை அறிவுறுத்தியுள்ளனர்.

    இதுகுறித்து பேசியுள்ள அந்தப்பெண். “ இந்த சம்பவம் காரணமாக நான் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன். அந்த  நபர் பேஸ்புக் அக்கவுண்டை மாற்றிவிட்டார். எனக்கு காவல்துறையின் மீது நம்பிக்கை உள்ளது. அந்த நபரை பிடித்துவிடுவார்கள் என தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: