• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட்... பிரதமர் மோடி வாழ்த்து

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட்... பிரதமர் மோடி வாழ்த்து

செயற்கைக் கோள்கள் அனைத்தும் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டு, செயற்கைக் கோள்கள் அவற்றுக்கான சுற்றுப்பாதைகளில் நிலைநிறுத்தப்பட்டன.

  • Share this:
    பி.எஸ்.எல்.வி சி-49 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்த ஆண்டின் முதல் ராக்கெட்டை விண்ணில் ஏவப்பட்டது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

    புவி கண்காணிப்புக்கு உதவும் செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் ஏவுப்பட்டு புவிவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டன. ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்ணில் ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-49 ரக ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

    பூமி கண்காணிப்பு பணிக்காக இந்தியாவுக்கு சொந்தமான இ.ஓ.எஸ். 01 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோள் மற்றும் வணிக ரீதியிலான 9 பன்னாட்டு செயற்கைகோள்கள் இந்த ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டன. பின்னர் ராக்கெட்டில் இருந்து செயற்கைக் கோள்கள் அனைத்தும் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டு, செயற்கைக் கோள்கள் அவற்றுக்கான சுற்றுப்பாதைகளில் நிலைநிறுத்தப்பட்டன. 44 புள்ளி 5 மீட்டர் உயரமுள்ள இந்த ராக்கெட் பிஎஸ்எல்வி வகையில் ஏவப்படும் 51 வது ராக்கெட்டாகும்.

    கொரோனா பரவல் அச்சம் காரணமாக ராக்கெட் ஏவுவதை காண பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த நிகழ்வை சதீஷ்தவான் விண்ணில் ஆய்வு மையத்தில் இருந்து விஞ்ஞானிகள் மட்டும் கண்காணித்தனர். செயற்கைக் கோள்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதால் விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர்.

    இஸ்ரோ தலைவர் சிவன் 

    இது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் கூறியதாவது, “பிஎஸ்எல்வி- சி 49 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. அனைத்து செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக பிரிந்துவிட்டன. 10 செயற்கை கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தமானது கொரோனா காலத்திற்கு பிறகு செயல்படுத்திய திட்டம் வெற்றியை தந்துள்ளது.

    குறைந்த எண்ணிக்கையிலான ஆராய்ச்சியாளர்களை கொண்டு பி.எஸ்.எல்.வி- 49 ராக்கெட்டை வடிவமைத்தோம். ராக்கெட் ஏவுதலில்பங்காற்றிய தொழில் நுட்ப பணியாளர்களுக்கு நன்றி” என கூறி உள்ளார்.



    மேலும் படிக்க...தமிழகப் பூர்வீகம்: அமெரிக்க துணை அதிபராகும் கமலா ஹாரிஸ் - யார் இவர்?

    பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்கு, இஸ்ரோவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில், “  இந்திய விஞ்ஞானிகள் பல தடைகளை முறியடித்து குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் ராக்கெட்டை விண்ணில் செலுத்தி உள்ளனர் என கூறி உள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: