வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட்!

எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கும் இருப்பிடங்களை கண்டறிந்து அழிப்பதற்கு இந்த பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட் உதவியாக இருக்கும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

Vaijayanthi S | news18
Updated: May 22, 2019, 8:35 AM IST
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட்!
கோப்புப் படம்
Vaijayanthi S | news18
Updated: May 22, 2019, 8:35 AM IST
பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை கண்காணிப்பிற்கான ரீசாட் செயற்கைக் கோளைச் சுமந்துச் சென்ற பி.எஸ்.எல்.வி சி-46 ராக்கெட் இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

பூமியைக் கண்காணிப்பிற்கான ரீசாட் 2பி ஆர் 1 என்ற புதிய செயற்கைக் கோளை இஸ்ரோ உருவாக்கி உள்ளது. இந்த செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட் மூலம் இன்று காலை 5 மணி 27 நிமிடங்களுக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டுள்ளது.சுமார் 615 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக் கோள் 555 கிலோ மீட்டர் தொலைவுக்கு புவி வட்டப் பாதையில் சுற்றி வரும். ரீசாட் செயற்கைக்கோளின் உதவியால் இரவிலும், பகலிலும் மட்டுமின்றி வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் நேரத்திலும் பூமியைத் தெளிவாக படம் பிடிக்க முடியும்.

இதில் அதிநவீன புகைப்பட சாதனம் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரேடார் தொழில்நுட்பத்தின் உதவியுடன் பூமியைத் தெளிவாகப் படம் பிடித்து கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்ப முடியும்.

இஸ்ரோ தலைவர் சிவன்


மேலும், எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கும் இருப்பிடங்களை கண்டறிந்து அழிப்பதற்கு பாதுகாப்பு படையினருக்கு உதவியாக இருக்கும் என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

Also see... எப்படி நடக்கும் வாக்கு எண்ணிக்கை?

Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...