பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட்டை இந்தியா வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
புவியை கண்காணிக்கும் ஒசன்சேட்-03 என்ற 960 கிலோ எடை கொண்ட செயற்கைகோள் மற்றும் 8 மிகச்சிறிய வகை செயற்கைக்கோள்களையும் ஏவுவதற்கு இஸ்ரோ முடிவு செய்தது.
இதற்காக, நான்கு புள்ளி நான்கு மீட்டர் உயரமும், 321 டன் எடையும் கொண்ட பிஎஸ்எல்சி-54 ராக்கெட் நான்கு நிலைகளில் வடிவமைக்கப்பட்டிருந்தது.
இதற்கான கவுண்ட் டவுன், ஆந்திராவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் நேற்று தொடங்கியது. இந்நிலையில் திட்டமிட்டபடி முற்பகல் 11.56 மணிக்கு ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இதையும் படிங்க: WATCH - செவ்வாய் கிரகம் டூ பூமி.. மண் மாதிரிகளை பக்காவாக பார்சல் செய்யும் நாசா.. வீடியோ!
இந்த ராக்கெட் இரு நிலைகளை கொண்டுள்ள நிலையில், வெற்றிகரமாக முதல் நிலையை நிறைவு செய்தது. இந்திய நிறுவனங்கள் தவிர, அமெரிக்காவைச் சேர்ந்த 4 ஆஸ்ட்ரோகாஸ்ட் நனோ செயற்கை கோள்களும் விண்ணில் ஏவப்பட்டுள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ISRO