'3 ஆண்டுகளுக்கு முன்பே எனக்கு உணவில் விஷம் வைத்தனர்..' நீண்டகால ரகசியத்தை வெளியிட்ட இஸ்ரோவின் மூத்த விஞ்ஞானி..

'3 ஆண்டுகளுக்கு முன்பே எனக்கு உணவில் விஷம் வைத்தனர்..' நீண்டகால ரகசியத்தை வெளியிட்ட இஸ்ரோவின் மூத்த விஞ்ஞானி..

இத்தொழில்நுட்பத்தை வேறு நாடுகளிடமிருந்து நாம் வாங்கும் சூழல் ஏற்பட்டிருந்தால் அது 10 மடங்கு விலை அதிகம் கொண்டதாக இருந்திருக்கும் என மிஸ்ரா தெரிவித்தார்.

இத்தொழில்நுட்பத்தை வேறு நாடுகளிடமிருந்து நாம் வாங்கும் சூழல் ஏற்பட்டிருந்தால் அது 10 மடங்கு விலை அதிகம் கொண்டதாக இருந்திருக்கும் என மிஸ்ரா தெரிவித்தார்.

  • Share this:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் மூத்த
விஞ்ஞானியும்,  அகமதாபாத்தில் செயல்பட்டு வரும் இஸ்ரோவின் துணை அமைப்பான விண்வெளி பயன்பாட்டு மையத்தின் முன்னாள் இயக்குனருமான தபன் மிஸ்ரா கடந்த 2017-இல் தனக்கு உணவில் விஷம் வைக்கப்பட்டதாக கூறியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இஸ்ரோவின் மூத்த ஆலோசகராக பணியாற்றி வரும் மிஸ்ரா இந்த மாதத்துடன் ஓய்வுபெறவுள்ள நிலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு மே 23-ஆம்  தேதியன்று பெங்களூருவில் உள்ள இஸ்ரோ
தலைமையகத்தில் பணி உயர்வு தொடர்பான நேர்காணலின் போது தனக்கு உணவில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது முகநூலில் பதிவிட்டுள்ள மிஸ்ரா, ரேடார் இமேஜிங் சாட்டிலைட்டை எனும் மிக உயரிய தொழில்நுட்பத்தை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றியதன் காரணமாக தனக்கு இந்நிலை ஏற்பட்டிருக்கலாம் என கருதுவதாக தெரிவித்துள்ளார்.



இத்தொழில்நுட்பம் மூலம் பூமியின் எந்த பகுதியையும் இரவு, பகல்
பாகுபாடின்றி கண்காணிக்க முடியும் என்பது முக்கியமானதாக
பார்க்கப்படுகிறது. மேலும் இத்தொழில்நுட்பத்தை வேறு நாடுகளிடமிருந்து நாம் வாங்கும் சூழல் ஏற்பட்டிருந்தால் அது 10 மடங்கு விலை அதிகம் கொண்டதாக இருந்திருக்கும் என அவர் தெரிவித்தார்.

எனவே இத்தொழில்நுட்பம் அறிந்தவன் என்ற வகையில் இத்தொழில்நுட்பத்தை கையாளும் போட்டி நாடுகள் ஏதேனும் என்னை கொலை செய்யும் நோக்கில் இந்தச் சதிச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவித்ததுடன் மத்திய அரசு இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார் மிஸ்ரா.
Published by:Arun
First published: