ஜி.எஸ்.எல்.வி. எப்10 ராக்கெட் இலக்கை எட்டவில்லை - இஸ்ரோ

ஜி.எஸ்.எல்.வி. எப் -10

கிரையோஜெனிக் எஞ்ஜின் பகுதியில் ஏற்பட்ட சிக்கலால் இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை.

  • Share this:
    ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட்டில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் இலக்கை எட்டவில்லை எனவும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

    இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பூமி கண்காணிப்புக்காக 2 ஆயிரத்து 268 கிலோ எடை கொண்ட ஈ.ஓ.எஸ்.03 (EOS-3) என்ற செயற்கைகோளை வடிவமைத்தது.

    இதனை ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-10’ ராக்கெட்டில் பொருத்தி, இன்று காலை ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2ஆவது ஏவுதளத்தில் இருந்து விண்ணுக்கு ஏவப்பட்டது.

    Must Read : வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. எப் -10 ராக்கெட்

    முன்னதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் ராக்கெட் மற்றும் செயற்கைகோள்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர். தொடர்ந்து ‘கவுண்ட்டவுனை’ முடித்து இன்று காலை ராக்கெட் விண்ணை நோக்கி சீறிபாய்ந்தது.

     



    இந்நிலையில், ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட்டில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். மேலும் கிரையோஜெனிக் எஞ்ஜின் பகுதியில் ஏற்பட்ட சிக்கலால் இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Suresh V
    First published: