ISRO PSLV-C51 | 19 செயற்கை கோள்களுடன் விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி-சி51... பொறியியல் கல்லூரி மாணவர்கள் தயாரித்த 5 செயற்கை கோள்களும் ஏவப்பட்டன...

ISRO PSLV-C51 | 19 செயற்கை கோள்களுடன் விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி-சி51... பொறியியல் கல்லூரி மாணவர்கள் தயாரித்த 5 செயற்கை கோள்களும் ஏவப்பட்டன...

18 செயற்கை கோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி-சி51 ராக்கெட்......

பிஎஸ்எல்வி-சி51 ராக்கெட் மூலம் ஜேப்பியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தயாரித்துள்ள நானோ செயற்கைகோள் உள்ளிட்ட 19 செயற்கைக்கோள்கள் இன்று விண்ணில் செலுத்தப்பட்டன.

  • Share this:
    இஸ்ரோ சார்பில் இந்த ஆண்டின் முதல் திட்டமாக பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் ஞாயிற்றுக்கிழமை காலை 10.24 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட்டில் பிரேசில் நாட்டின் அமசோனியா-1 என்ற செயற்கை கோள் மற்றும் 18 சிறிய ரக செயற்கைகோள்களும் அனுப்பப்படுகின்றன. அதில், காஞ்சிபுரம் மாவட்டம் சுங்கவார்சத்திரம் அருகே உள்ள ஜேப்பியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தயாரித்த நானோ செயற்கைகோளும் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

    460 கிராம் எடையுள்ள இந்த செயற்கைகோளுக்கு யுனிட்டி ஜே.ஐ.டி சாட் என பெயரிடப்பட்டுள்ளது. செயற்கைகோள் விண்ணில் இருந்து அனுப்பும் முக்கிய தரவுகளை பெற்று செயல்படுத்துவதற்காக கல்லூரி வளாகத்திலேயே கண்காணிப்பு தரைதள கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

    செயற்கைகோள் அனுப்பும் தரவுகளை வைத்து ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுச்சூழல், நீர் ஆதாரங்களை பாதுகாப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கல்லூரி பேராசிரியர் பெனிஸ்ஸா தெரிவித்தார்.

    மேலும் படிக்க... "எஸ்பிபி இங்கு தான் உள்ளார்" : மதுரையில் ஷைலஜா, சரண் நெகிழ்ச்சி

    ஜேப்பியார் கல்லூரியில் பல்வேறு துறைகளில் பயிலும் 12 மாணவர்கள் இணைந்து யுனிட்டி ஜேஐடி சாட் செயற்கைகோளை தயாரித்துள்ளனர். பிஎஸ்எல்வி-சி51 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான கவுன்டவுன் சனிக்கிழமை காலை 8.24 மணிக்கு தொடங்கியிருந்தது. அமெரிக்காவின் 13 நானோ செயற்கைக்கோள்களும் பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட்டுடன் விண்ணில் செலுத்தபட்டன.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: