2024ம் ஆண்டில் வெள்ளி கிரகத்திற்கு விண்கலம் அனுப்பப்பட உள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான (இஸ்ரோ), தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது. செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பும் மங்கள்யான் திட்டம் சந்திரனுக்கு விண்கலம் அனுப்பும் சந்திரயான்-1, சந்திரயான்-2 திட்டங்களையும் மேற்கொண்டது. அதைத் தொடர்ந்து, இப்பொழுது வெள்ளி கிரகத்தின் மீது இஸ்ரோவின் பார்வை பதிந்துள்ளது.
அடுத்தக்கட்டமாக வெள்ளி கிரகத்தை ஆராய்ச்சி செய்ய விண்கலம் அனுப்ப திட்டமிட்டுள்ளது. சந்திரனுக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் விண்கலம் அனுப்பியதை தொடர்ந்து வெள்ளி கிரகத்துக்கு விண்கலம் அனுப்பும் பணிகளில் இஸ்ரோ ஈடுபட்டு வருகிறது. இதுதொடர்பாக நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பூமியும் வெள்ளி கிரகமும் அருகருகே வருவதால் குறைந்த அளவு உந்துசக்தியை கொண்டு விண்கலத்தை, சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தலாம் என்றும் இல்லையென்றால் 2031 வரை காத்திருக்க வேண்டும் என்றும் கூறினார்.
இந்த விண்கலம், வெள்ளி கிரகத்தின் மேற்பரப்பின் அடியில் என்ன இருக்கிறது என்பது குறித்தும், அதனை சுற்றி உள்ள மேகக்கூட்டங்கள் பற்றி ஆராய உள்ளது.
Published by:Lilly Mary Kamala
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.